» »உங்க வாயை பிளக்கும்படி ஆச்சரியப்படும் வகையில் திருமணம் நடக்கும் இடங்கள்!!

உங்க வாயை பிளக்கும்படி ஆச்சரியப்படும் வகையில் திருமணம் நடக்கும் இடங்கள்!!

Written By: Udhaya

சாந்தோம் சர்ச்சுக்காக மயிலாப்பூர் கோயிலை இடித்த கதை தெரியுமா?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். ஆம் உண்மைதான் வானத்து தேவதையே வந்திறங்கி மணமகன் கைபிடித்து மணமுடிக்கும் அளவுக்கு செழிப்பாக நடந்திரும் திருமணங்கள் நிச்சயமாக இந்தியாவில்தான் சாத்தியம். அது மிகையல்ல.. உலகில் பல நாடுகள் இருந்தாலும் கலாச்சாரம் நிறைந்து பண்பாட்டுடன் கூடிய திருமணங்கள் கொண்டாட்டங்களாக இருப்பது நம் நாட்டில்தான்.

இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!

இந்தியா என்றவுடன் ஒரே மாதிரியான திருமணம் என்றில்லை. எப்படி பல்வேறு இனங்கள் இருக்கின்றனவோ அப்படி அவர்களுக்கென்று பல விதமான முறைகளும் திருமணச் சடங்குகளும் இருக்கின்றன.

வெளிநாடுகளில் பொதுவாக திருமணம் என்பது இரு மனங்கள் இணைவது என்பார்கள். இந்தியாவில்தான் திருமணம் இரு குடும்பத்தை, இரு வம்சத்தை இணைக்கும்.

இந்த இடங்கள்ல காதல் புரபோஸ் பண்ணா கண்டிப்பா சக்ஸஸ்தான்! தெரியுமா?

கோயில் முதல் கோட்டை வரை திருமணங்களை நடத்தி முடித்து பெருமிதம் கொள்ளும் தந்தைகளுக்கு அதைவிட வாழ்நாள் சாதனை வேறேதுமில்லை. தற்போது இப்படியான திருமணங்கள் எங்கெல்லாம் நடக்கின்றன என்பதை காண்போம்.

மாளிகை திருமணங்கள்

மாளிகை திருமணங்கள்

சற்று அதிகமான செலவானாலும், மாளிகைகளில் திருமணம் செய்வது என்பது வசதி படைத்த இந்தியர்களுக்கு இயல்பான ஒன்றாகும்.

இளவரசியான தனது மகளை இளவரசனுடன் மணமுடிக்க எவ்வளவு செலவு செய்தாலும் பரவாயில்லை என்று தன் வாழ்நாள் சேமிப்பைக் கூட விட்டுத்தரும் தந்தைகளும் தாய்மார்களும் கண்கலங்கும் ஆனந்த தருணங்களை இந்த மாளிகைகள் சுமந்துநிற்கும்.

கடற்கரை திருமணங்கள்

கடற்கரை திருமணங்கள்

உலகில் பல நாடுகளில் பிரபலமானதாக இருந்தாலும், இந்தியாவில் முக்கியமாக கிறித்துவர்கள்தான் பெரும்பாலும் இந்த முறை திருமணம் செய்கின்றனர்.

கோவா, கேரளத்தில் அதிகமாக நடைபெறும் இம்மாதிரியான திருமணங்களின்போது வாழ்நாள் முழுதும் கரம்பிடிக்க காத்திருக்கும் காதலனின் கைவிரல்களில் மோதிரமணிந்து நாணி தலைகுனிந்து மனமிணைக்கும் மணமகளின் கனவுகள் நிறைவேறுகின்றன.

ராயல் திருமணங்கள்

ராயல் திருமணங்கள்

ராயல் திருமணங்கள் என்பது மிகவும் விலைமதிப்பான திருமண விழாவாக கருதப்படுகின்றன.

பொதுவாக ராஜஸ்தானிலும், இந்தியாவின் அநேக இடங்களிலும் நடைபெறும் இந்த வகை திருமணங்கள் உலகம் முழுவதும் பேசும்படியாக அமைந்துவிடும்.

உமைத் பவன் மாளிகை - ஜோத்பூர்

உமைத் பவன் மாளிகை - ஜோத்பூர்

மிகப்பெரிய முகப்பு அறை, 4500 சதுர அடி மீவர் ஹால் , 9000 சதுர அடி அளவுள்ள மிகப் பரந்த நிகழ்ச்சி அறை என மிக பிரம்மாண்ட மாளிகை இது.

இது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ளது.

en.wikipedia.org

ராம்பக் மாளிகை - ஜெய்ப்பூர்

ராம்பக் மாளிகை - ஜெய்ப்பூர்

பிங்க் சிட்டி என்றழைக்கப்படும் இளஞ்சிவப்பு நகரத்தில் அமைந்துள்ள இந்த மாளிகை இந்தியாவின் பிஸியான மாளிகைகளுள் ஒன்றாகும்.

சுவர்ணமஹால், பிரம்மாண்ட பால்ரூம் என அமைந்துள்ள இந்த மாளிகை மிகச்சிறப்பான ராயல் லுக்கை அளிக்கிறது.

en.wikipedia.org

கஜ்னீர் மாளிகை - பிக்காநெர்

கஜ்னீர் மாளிகை - பிக்காநெர்

6000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகை, கட்டுமான பொறியியலுக்கு சிறப்பு சேர்க்கும் ஒன்றாகும்.

மிகப்பழமையான கோட்டை என்றாலும், தற்காலத்திய வசதிகளுடன் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பலக்னமா மாளிகை

பலக்னமா மாளிகை

வானத்தின் கண்ணாடி என்று அழைக்கப்படும் இந்த மாளிகை, கோகினூர் மற்றும் ஜேக்கப் வைரங்களுக்கும் புகழ்பெற்றது.

மிகப் பிரம்மாண்டமான திருமணங்கள் இங்கு நடைபெறுகின்றன. உலகின் அதிகம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் வகையிலான டைனிங் டேபிள் சாப்பாட்டு மேசை இங்கு உள்ளது.

101 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடலாம். இது 9000 சஅ பரப்பளவுடையது.

en.wikipedia.org

தாஜ் ஏரி மாளிகை - உதய்ப்பூர்

தாஜ் ஏரி மாளிகை - உதய்ப்பூர்

உதய்ப்பூரின் மணிமகுடம் என்றால் மிகையாகாத அளவுக்கு இந்த மாளிகை அமைந்துள்ளது.

ஏரிக்கரையில் மின்னும் இந்த மாளிகையின் அருகே பெரிய தோட்டம் ஒன்றும் உள்ளது.

en.wikipedia.org

லக்ஸ்மி விலாஸ் மாளிகை - பாரத்பூர்

லக்ஸ்மி விலாஸ் மாளிகை - பாரத்பூர்


மிகப்பெரிய மாளிகையான இது 1994ல் விடுதியாக மாற்றப்பட்டது. முன்னதாக ராஜா ரகுநாத சிங் இந்த மாளிகையில் தங்கியிருந்தார் என கூறப்படுகிறது.

திருமணங்கள் மட்டுமில்லாது , தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகளும் இந்த மாளிகையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

www.laxmivilas.com

லக்ஸ்மி நிவாஸ் மாளிகை பிக்கானர்

லக்ஸ்மி நிவாஸ் மாளிகை பிக்கானர்


ராயல் குடும்பத்தினர் அல்லது வசதியான குடும்ப திருமணங்கள் இந்த மாளிகையில் பல நடந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் இங்கு விருந்தினர் மாளிகையும் உள்ளது. கிங்சைஸ் சோபா, கட்டில்கள், 2 அறைகள் என வசதிகளைக் கொண்டது இந்த மாளிகை.

சிட்டி மாளிகை - ஜெய்ப்பூர்

சிட்டி மாளிகை - ஜெய்ப்பூர்

முகலாயர்கள், ராஜ்புத் மன்னர்கள் மற்றும் ஐரோப்பிய கட்டுமானக் கலைகளை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ளது இந்த மாளிகை.

இது மகாராஜா சாவாய் மன் சிங் 2 அருங்காட்சியகமாக உள்ளது.

 சிட்டி மாளிகை - உதய்ப்பூர்

சிட்டி மாளிகை - உதய்ப்பூர்

நீங்கள் இதுவரை கண்டிராத மிக அழகான மாளிகை என்றால் அது சிட்டி மாளிகைதான்.

இது இந்தியாவின் மிக பெரிய மாளிகையாகும். இங்கிருந்து பார்க்கும்போது உதய்ப்பூர் நகரமும், உதய்ப்பூர் ஏரியும் அழகாக காட்சயளிக்கும்.

கடற்கரை திருமண தளங்கள்

கடற்கரை திருமண தளங்கள்


கோவா

சூரியன் மறையும் மங்கொளி நேரம் மணங்களை இணையச் செய்யும் மணவிழா வெகு சிறப்பாக நடைபெறும் இந்த கோவாவில்....

அந்தமான் நிகோபர் தீவுகள்

அந்தமான் நிகோபர் தீவுகள்

அந்தமான் நிகோபர் தீவுகளில் பெரும்பான்மையான திருமணங்கள் கடற்கரைகளில் நடைபெறுகின்றன.

திருமணம் மற்றும் தேனிலவுக்கு சிறந்த இடம்.

கேரளம்

கேரளம்

கேரள மாநிலத்தில் பல இடங்களில் கடற்கரை திருமணங்கள் நடைபெறுகின்றன.

நிஜமான காதல் தேசம் இதுதான்! அப்படி என்ன இருக்கு!

நிஜமான காதல் தேசம் இதுதான்! அப்படி என்ன இருக்கு!

நிஜமான காதல் தேசம் இதுதான்! அப்படி என்ன இருக்கு!

ஹேவ்லாக் தீவு - இங்க வந்தீங்கன்னா திரும்பி போக மனசு வராது!

ஹேவ்லாக் தீவு - இங்க வந்தீங்கன்னா திரும்பி போக மனசு வராது!

ஹேவ்லாக் தீவு - இங்க வந்தீங்கன்னா திரும்பி போக மனசு வராது!

நீங்கள் இதுவரை கண்டிராத முற்றிலும் 50 வித்தியாசமான கோணங்களில் தாஜ் மஹால்!

நீங்கள் இதுவரை கண்டிராத முற்றிலும் 50 வித்தியாசமான கோணங்களில் தாஜ் மஹால்!

நீங்கள் இதுவரை கண்டிராத முற்றிலும் 50 வித்தியாசமான கோணங்களில் தாஜ் மஹால்!

Read more about: travel, palace
Please Wait while comments are loading...