Search
  • Follow NativePlanet
Share
» »உலகிலேயே மிகப்பெரிய ஜங்கிள் சஃபாரி பூங்காவைப் பெறப்போகும் இந்தியா!

உலகிலேயே மிகப்பெரிய ஜங்கிள் சஃபாரி பூங்காவைப் பெறப்போகும் இந்தியா!

வனவிலங்கு ஆர்வலர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் இது ஒரு நற்செய்தி! ஆம், உலகிலேயே மிகப்பெரிய ஜங்கிள் சஃபாரி பூங்கா இந்தியாவிற்கு வரவிருக்கிறது. இதற்காக ஹரியானாவில் குருகிராம் மற்றும் நூஹ் மாவட்டங்களின் ஆரவல்லி மலைத்தொடரில் 10,000 ஏக்கர் பரப்பளவில் நிலம் தயார்படுத்தப்பட்டு வருகிறது! இனி நாம் இந்த பகுதிகளுக்கு செல்லும் போது, இந்த ஜங்கிள் சஃபாரி பூங்காவையும் பார்த்து வியக்கலாம்!

பல அம்சங்களுடன் வரவிருக்கும் ஜங்கிள் சஃபாரி பார்க்

பல அம்சங்களுடன் வரவிருக்கும் ஜங்கிள் சஃபாரி பார்க்

விரைவில் வரவிருக்கிற இந்த ஜங்கிள் சஃபாரி பூங்காவில் ஒரு பெரிய ஹெர்பெடேரியம், பறவை பூங்கா, தாவர உண்ணிகளுக்கான பெரிய பகுதி, அயல்நாட்டு விலங்கு பறவைகளுக்கான பகுதி, அண்டர்வாட்டர் வேர்ல்ட், இயற்கை பாதைகள், சுற்றுலா மண்டலங்கள், தாவரவியல் பூங்காக்கள், பயோம்கள், பூமத்திய ரேகை, வெப்பமண்டலம், பாலைவனம் போன்றவையும் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களின் நலனும் பங்களிப்பும்

உள்ளூர் மக்களின் நலனும் பங்களிப்பும்

சமீபத்தில் ஷார்ஜா சென்றிருந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், நாடு திரும்பியதும் நம் பகுதியில் இது மாதிரி ஒன்று அமைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தாராம். அமைச்சர் ஹரியானாவின் என்சிஆர் பிராந்தியத்தில் ஜங்கிள் சஃபாரிக்கு நிறைய சாத்தியங்களும் நேர்மறையும் இருப்பதாக கூறினார். மேலும் இது, இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கும் என்று கூறினார்.

உலகிலேயே மிகப்பெரிய ஜங்கிள் சஃபாரி

உலகிலேயே மிகப்பெரிய ஜங்கிள் சஃபாரி

ஷார்ஜா ஜங்கிள் சஃபாரியே உலகின் மிகப்பெரிய சஃபாரியாகும். ஆனால் அதைவிட பெரிய ஜங்கிள் சஃபாரியை நாம் விரைவிலேயே நம் நாட்டில் பார்க்க போகிறோம். ஹரியானாவில் அமைக்கப்படும் இந்த ஜங்கிள் சஃபாரி ஷார்ஜா ஜங்கிள் சஃபாரியை விட ஐந்து மடங்கு பெரிதாக இருக்குமாம். பூங்காவை வடிவமைத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றிற்காக நிறுவனங்கள் இப்போது சர்வதேச வடிவமைப்பு போட்டியில் போட்டியிட வேண்டும். அதில் இருந்தே ஒன்றிற்கு இந்த ஆர்டர் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் உள்ள ஜங்கிள் சஃபாரி பூங்கா இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமாக இருக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

More News

    Read more about: safari in haryana gurugram
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+