Search
  • Follow NativePlanet
Share
» »நின்ற நிலையில் அருள் வழங்கும் ஆஞ்சநேயர் கோவில் ! உலகில் இது மட்டும்தான்!

நின்ற நிலையில் அருள் வழங்கும் ஆஞ்சநேயர் கோவில் ! உலகில் இது மட்டும்தான்!

ஹம்பி எனும் பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான். விஜயநகர சாம்

By Udhaya

ஹம்பி எனும் பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான். விஜயநகர சாம்ராஜயத்தின் தலைநகராக விளங்கி, ஹொய்சள கட்டிடக்கலை பாணியின் அழகை பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த ஹம்பி அல்லது விஜயநகர் என்று அழைக்கப்படும் சுற்றுலா ஸ்தலத்தை கற்களில் எழுதப்பட்டுள்ள கவிதை எனலாம். ஹம்பியிலுள்ள புனித ஸ்தலங்களில் ஒன்று இந்த யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோயில் ஆகும். இந்த கோவிலின் வரலாறு, பூசை நேரம், முகவரி ஆகியவற்றுடன் புகைப்படங்களையும் காணப்போகிறோம்.

நின்ற நிலையில் அருள் வழங்கும் ஆஞ்சநேயர் கோவில் ! உலகில் இது மட்டும்தான்!


Daniel Hauptstein

ஹனுமான் என்றும் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படும் கடவுளுக்காக இந்த கோயில் எழுப்பப் பட்டுள்ளது. இந்த கோயில் கோதண்ட ராமர் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. ஹனுமானின் விக்கிரகமானது இங்கு ஒரு யந்திரத்தில் பொதிக்கப்பட்டிருப்பது இந்த கோயிலின் பிரதான விசேஷமாகும்.

நெருங்கி உற்று பார்த்தால் இந்த யந்திரத்தின் மைய விக்கிரகத்தைச் சுற்றிலும் எண்ணற்ற வானரங்களின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இது தவிர தியானத்தில் உட்கார்ந்த நிலையில் ஒரு ஹனுமான சிலையும் இந்த கோயிலில் உள்ளது. இது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் எல்லா ஆலயங்களிலும் ஹனுமானின் சிலை சக்தியைக்காட்டும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளதே தவிர தியானத்தில் அமர்ந்துள்ளது போன்ற சிலை வேறெங்கும் இல்லை.

இக்கோயிலின் வெளிச்சுவர்கள் எல்லா ஹிந்து கோயில்களையும் போன்று வெள்ளை மற்றும் காவி நிற பட்டைகளால் வண்ணம் பூசப்பட்டுள்ளன. இங்குள்ள புனித மரத்தின் மீது மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளதை காணலாம். இந்த யந்த்ரோதாரகா ஆஞ்சநேயா கோயில் பக்தர்களுக்கு காலையும் மாலையும் திறந்து விடப் படுகிறது.

நின்ற நிலையில் அருள் வழங்கும் ஆஞ்சநேயர் கோவில் ! உலகில் இது மட்டும்தான்!


Aleksandr Zykov

முதன்மை கடவுள்

இந்த கோவிலின் முதன்மை கடவுள் அல்லது மூலவர் ஆஞ்சநேயர் தான். இதனால்தான் இந்த கோவிலுக்கு ஆஞ்சநேயர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

செல்ல சிறந்த காலம்

இந்த கோவிலுக்கு செல்ல சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள காலம் ஆகும். ஆனாலும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே இங்கு கூட்டம் காணப்படும். அப்போது இருந்தே மக்கள் வரத் தொடங்கிவிடுவர்.

பூசை நேரம்

இந்த கோவிலில் பூசைக்கான நேரம் என்று தனிப்பட்டு இல்லை. ஆனால் காலை ஒருவேளையும் மாலை ஒருவேளையும் பூசை நடைபெறுகிறது

நுழைவு கட்டணம்

பொதுவாக கர்நாடக மாநிலத்தின் பல கோவில்களில் நுழைவு கட்டணமாக சிறிய அளவு தொகை வசூலிப்பது வழக்கம்தான் என்றாலும், இந்த கோவிலுக்கு அப்படி எதுவும் இல்லை. இலவச அனுமதிதான்.

எப்படி சென்றடைவது

விமானம் மூலமாக

பெல்லாரியில் அமைந்துள்ள விமான நிலையமே இந்த ஆஞ்ச நேயர் கோவிலுக்கு செல்ல அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். இது 64கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து டாக்ஸி, பேருந்து, வாடகை வண்டிகள் மூலம் எளிதில் அடையலாம்.

ரயில் மூலம்

இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு மிக அருகில் உள்ள ரயில் நிலையம் ஹசெபேட். இது 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கார், பேருந்து, வாடகை வண்டிகள் மூலம் எளிதில் கோவிலை அடைய முடியும்.

சாலை வழியாக

ஹம்பியில் அமைந்துள்ள இந்த இடம் உள்ளூர் நகரங்களுடன் நல்ல முறையில் சாலை இணைப்பைப் பெற்றுள்ளது சுய வாகனத்தில் வருவதென்றாலும் சுலபமான வழிதான்.

Read more about: travel temple karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X