Search
  • Follow NativePlanet
Share
» »மணிக்கு 320 கிமீ வேகத்தில் பறக்கின்ற புல்லட் ரயில் – இந்தியாவிற்கு வருகிறது 2026 இல்!

மணிக்கு 320 கிமீ வேகத்தில் பறக்கின்ற புல்லட் ரயில் – இந்தியாவிற்கு வருகிறது 2026 இல்!

இந்திய ரயில்வே உலகத்தர அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. சொகுசு ரயில்கள் முதல் வந்தே பாரத் வரை, மலை ரயில்கள் முதல் அதிவேக ரயில்கள் வரை இந்திய ரயில்வே கலக்கி வருகிறது. ஆம் இந்திய ரயில்வேயில் மைல் கல் முயற்சியாக புல்லட் ரயில் சேவை துவங்கப்படவிருக்கிறது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சூரத் மற்றும் பிலிமோரா இடையே இயக்கப்படும் என்றும் படிப்படியாக சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது!

Bullet train in India by 2026

உலகத்தரத்தில் இந்திய ரயில்வே சேவை

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அகமதாபாத் நகருக்கு விஜயம் செய்தபோது ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். 2026ல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்றும், இலக்கை அடைவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார். இது தவிர, ஹபீப்கஞ்ச் மாதிரியைப் பின்பற்றி, நாடு முழுவதும் உள்ள 199 ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றும் திட்டமும் நடந்து வருகிறது என்றும் சமீபத்தில் கூறினார்.

Bullet train in India by 2026

மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில்

அகமதாபாத் மற்றும் மும்பை இடையே அதிவேக இரயில் (HSR) பாதையில் 320 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலை இயக்கும் திட்டம், 508 கிமீ தூரம் மற்றும் 12 நிலையங்களில் நின்று செல்லும். இரண்டு நகரங்களுக்கு இடையேயான தற்போதைய ஆறு மணி நேர பயணத்தை பாதியாக, தோராயமாக மூன்று மணி நேரமாக ரயில்வே குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட 1.1 லட்சம் கோடி செலவிற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாம் 81% நிதியளிக்க தயாராக உள்ளது.

Bullet train in India by 2026

விரைந்து செயல்படுத்தப்படும் பணிகள்

புல்லட் ரயில் திட்டத்துக்கான தூண்கள் வழித்தடத்தில் 61 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டு, சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக வைஷ்ணவ் கூறினார். இந்த சேவை வெற்றிகரமாக செயலபாட்டிற்கு வந்த பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் புல்லட் ரயில் சேவை விரிவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bullet train in India by 2026

கூடிய விரைவில் இந்தியாவில் புல்லட் ரயில் சேவை

தகவல் தொடர்பு அமைச்சக இலாகாவைக் கொண்ட வைஷ்ணவ், தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் சாதனைகளையும் எடுத்துரைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு 99% மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இப்போது கிட்டத்தட்ட 99% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று அவர் கூறினார். அதே போல உலகமே இந்திய ரயில்வே துறையின் சாதனைகளைப் பார்த்து வியக்கப் போகிறது என்றும் அவர் கூறினார்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+