» »"புறக்கணிக்கப்பட்ட பேய்கள் நகரம்" பாத்திருக்கீங்களா? அது இந்தியாவில் எங்கிருக்கு?

"புறக்கணிக்கப்பட்ட பேய்கள் நகரம்" பாத்திருக்கீங்களா? அது இந்தியாவில் எங்கிருக்கு?

Written By: Bala Karthik

இந்த கட்சினை சில நேரங்களில் 'கச்ச்' என்றும் அழைக்கப்பட, குஜராத் மாநிலத்தில் காணப்படும் தீவு தான் இது என நமக்கு தெரிய வருகிறது. இதன் மேற்கில் அரபிக் கடலும், தெற்கில் கட்ச்சின் வளைகுடாவும், வடக்கில் கட்ச் ரான்னும் காணப்படுகிறது. கட்ச், தன்னுடைய எல்லைகளை பாகிஸ்தானின் வடக்கு பகுதியின் கட்ச் ரான்னுடனும் பகிர்ந்துக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மேற்கு காடு எனவும் இதனை அழைக்கப்பட, கட்ச் என்ற பெயரானது 'கட்சுவா' வில் இருந்து கிடைக்கப்பட, அதற்கு ஆமை என அர்த்தமாகும். இதன் தோற்றத்தால் இப்பெயரானது கிடைக்கப்பட, இந்த கட்சானது 45,674 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சூழ்ந்திருக்க, இந்தியாவில் காணப்படுமோர் பெரிய மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே 10தாலுக்காக்களும், 939 கிராமங்களும் காணப்படுகிறது.

ஆழமற்ற ஈர நிலமாக இப்பகுதி காணப்பட, பருவமழைக்காலங்களில் தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு இப்பகுதி காணப்பட, மற்ற நேரங்களில் வரண்டும் காணப்படுகிறது. வருடத்தில் பெரும்பாலான நாட்கள் இந்த காட்ச் ரான் வறண்ட நிலமாக காணப்பட, இந்த பகுதியில் அணைகளின் கட்டுமானங்கள் குறைவாகவே காணப்படுகிறது.

இந்த கட்சிற்கு நர்மதா நதியானது ஊட்டப்பட, சர்தார் சரோவர் அணையிலிருந்து நீரானது பாய்ந்தோடுகிறது. கட்சின் நிர்வாக தலைமையகமாக பூஜ் காணப்படுகிறது. கட்சில் இருக்கும் மக்களுள் பலரும் கட்சி மற்றும் குஜராத்தி பேசுகின்றனர். இவர்களது முன்னிலை உணவாக சைவம் காணப்பட, கட்சி டபேலி எனப்படும் உணவு வகையானது இங்கே மிகவும் பிரசித்திபெற்று விளங்குகிறது.

2001ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தில் இந்த கட்ச் பாதிக்கப்பட, பூஜ் மாவட்டம் அவற்றுள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஏனெனில், இதன் மையப்பு்ளியானது 20 கிலோமீட்டர் தொலைவிலே காணப்படுகிறது.

இப்பொழுது கட்ச்சில் காணப்படும் நாம் பார்க்க வேண்டிய சிறந்த பத்து இடங்களை பற்றி பார்க்கலாம்.

 லக்பாட்:

லக்பாட்:

ஓர் முக்கிய துறைமுக நகரமான லக்பாட், 200 வருடங்களுக்கு மேலாக இங்கே காணப்படும் ஒன்றாகும். இதனை ‘புறக்கணிக்கப்பட்ட பேய்கள் நகரம்' என்றழைக்கப்பட, லக்பாட்டிற்கு பயணம் செய்வது எளிதானதொன்றல்ல. கோட்டை சுவரின் அமைப்புக்கு பெயர் பெற்ற இந்த இடமானது, பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரிய வருகிறது.

பட்டேஹ் முகமது என்பவரால் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு சுவர் ஒன்று எழுப்பப்பட, இந்து நதியிலிருந்து குஜராத்துக்கு வணிக புள்ளியாக இணைக்கப்பட்டு இவ்விடம் விளங்குகிறது. 1819ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத��தின் பேரழிவில், இந்து நதியானது தன் மாறுதலை நிச்சயமாக உணர, லக்பாட் தன்னுடைய பளபளப்பை இழந்தது.

பிர் காஷ் முகம்மது என்பவருக்காக ஒரு கல்லறைக் காணப்பட, லக்பாட்டின் முக்கிய ஈர்ப்பாக இவ்விடம் காணப்படுகிறது. ஆன்மீக பயற்சிகளுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவர், சுபியின் ஆதரவாளரும் கூட. இயற்கையை தன் வசமாக்கி சக்திக்கொண்டு தெரிவதாக அவர் சொல்லப்பட, லக்பாட்டில் எத்தகைய தங்கும் வசதிகளும் இந்நாள் வரை இல்லை என்பதனையும் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். மேலும், குருத்வாரா தங்குமிடம் மட்டுமே இங்கே காணப்படுகிறது.

Aalokmjoshi

கட்ச் அருங்காட்சியகம்:

கட்ச் அருங்காட்சியகம்:

1877ஆம் ஆண்டு மஹாராவோ கெங்கர்ஜியால் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகமானது, குஜராத்தில் காணப்படும் மிகவும் பழமை வாய்ந்த ஒரு அருங்காட்சியகமாகும். இதனை முன்பு ர்க்யூசன் அருங்காட்சியகம் என்றழைக்கப்பட, கவர்ச்சியான கட்ச் எழுத்துக்களை கொண்டிருக்க, இன்று இவை பயன்படுத்தப் படுவதில்லை எனவும் தெரிய வருகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் நாணயங்களின் சேகரிப்பு காணப்பட, அவை பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டவை என்பதும் தெரிய வருகிறது. இந்த அருங்காட்சியகம் அத்தகைய காலத்தவரின் வாழ்க்கையை நம��்கு உணர்த்த, கட்ச் பகுதி மக்களின் வரலாறும் நமக்கு புலப்படுகிறது. இங்கே அருங்காட்சியகத்தில் இத்தாலிய கோதிக் பாணிக் கட்டிடக்கலை காணப்பட, ஹமிர்சர் ஏரியின் ஆற்றங்கரையின் அழகின் பின்புலத்தில் இவ்விடம் அமைந்து நம்மை வெகுவாக கவர்கிறது.

Nizil Shah

சிறந்த காட்ச் ரான்னின் காட்சிகள்:

சிறந்த காட்ச் ரான்னின் காட்சிகள்:

உப்பு சதுப்பு நிலங்களால் சூழ்ந்திருக்கும் இந்த காட்ச் ரான் பகுதியானது, சிறந்த காட்ச் ரான் என்றும், குட்டி காட்ச் ரான் என்றும் வகுக்கப்பட்டுள்ளது. 7850 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட இந்த சிறந்த காட்ச் ரான் பகுதி, சதுப்பு நிலங்களில் உப்பையும் கொண்டு தட்டையாக காணப்படுகிறது. சிறந்த காட்ச் ரான்னில் வெள்ளை நிற ஆடையுடுத்திய அழகானது காணப்பட, பனி படர்ந்தும் எங்கும் காட்சியளிக்கிறது.

பருவமழைக்காலங்களின் போது, நிலமானது நீர் சூழ்ந்து காணப்பட, மற்ற நேரங்களில் வெள்ளை வண்ணம் கொண்டு நிலமானது மனதினை காட்சிகளால் அமைதியடைய செய்கிறது. ரான் உட்சவ் என்னும் திருவிழாவானது மூன்று மாதங்களுக்கு கொண்டாடப்பட, இதில் எண்ணற்ற பொழுதுபோக்கும், விளையாட்டுக்களுமென காணப்படுகிறது. இந்த பாலைவணத்து பூமிக்கு நீங்கள் செல்லும்போது, ஒட்டக சவாரி ஓருதடவையாவது சென்று மனதின�� இதமாக்க முயலுங்களேன்.

Rahul Zota

 சியோட் குகைகள்:

சியோட் குகைகள்:

கி.பி 1ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கேதீஸ்வரர் புத்தர்கள் இந்த குகையை குறிப்பிட, இந்த அமைப்பு மற்றும் கட்டிடக்கலையானது ஐந்து பாறை வெட்டு குகைகளை கொண்டிருக்க, இதனை சிவனாலயமாக பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு, சில முத்திரைகளும், தடயங்களும் பிராமன கல்வெட்டுக்களை கொண்டிருக்க, இந்த குகையானது புத்த மதத்தை போதிப்பதாக தன் உடமையாக்கப்பட்டது.

இந்து நதியின் வாய்ப்பகுதியின் அருகில் காணப்படும் இந்த சியோட் எனப்படும் புத்தக் குகையானது...சைனீஸ் பயணியாளர்களான ஷூஷாங்க் என்பவரால் ஏழாம் நூற்றாண்டில் தகவல் சொல்லப்பட்டது. 2001ஆம் ஆண்டின் பூஜ் நிலநடுக்கத்தின்போது இந்த தளமானது மோசமான பாதிப்புக்குள்ளாக, இன்று இவ்விடம் சீரம��க்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

nevil zaveri

 இந்தியன் காட்டு கழுதை சரணாலயம்:

இந்தியன் காட்டு கழுதை சரணாலயம்:

குட்டி காட்ச் ரான்னில் இந்த சரணாலயம் காணப்பட, 1972ஆம் ஆண்டில் இது நிறுவப்பட்டதாகவும் தெரியவருகிறது. இந்தியாவில் காணப்படும் இந்த சரணாலயம், மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமாகும். கௌர் அகா எனப்படும் இந்திய காட்டு கழுதை இங்கே காணப்பட, இந்த இனமானது அழிந்து வ��ும் காட்டு கழுதை துணை இனமாகும். இவ்வாறு பல விலங்குகளின் இனங்களை கொண்டிருக்கும் இந்தியாவில் காணும் சில இடங்களுள் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

இந்த சரணாலயத்தில் மூன்று புகும் (நுழையும்) புள்ளிகள் காணப்பட, அவற்றுள் பஜனா தான் மிகவும் ஈசியாக நாம் உள்ளே செல்ல கூடியதாக இருக்கிறது. இங்கே காணும் மற்ற சில சிறப்பு இனங்களாக...சின்காரா, முள்ளம்பன்றி, நரி, பாலைவனப் பூனைகள், குள்ளநரி, ஓநாய்கள், நீல எருதுகள் என பலவும் அடங்கும். மேலும், இந்த இந்திய காட்டு கழுதை சரணாலயம் பல பறவைகளின் வீடுகளுக்கு வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.

Asim Patel

 பன்றி புல் நிலங்கள்:

பன்றி புல் நிலங்கள்:


இந்தியாவில் காணப்படும் பெரிய இயற்கை புல் நிலமாக இது காணப்பட, 37வகை புற்கள் இந்த பன்றிகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. மேலும் பல வகையான விலங்குகளும், பறவைகளுமென...22 வகையான மேய்ச்சல் சமூகங்கள் இங்கே காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், உள்நாட்டு மால்தர்தல்களும் இங்கே காணப்பட, இங்கே காணப்படும் பன்றி எருமைமாடுகளும், கங்க்ரெஜ் கால்நடைகளும் 1000,000 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு என தினமும் தருகிறது.

இனப்பெருக்க இனங்களின் அடையாளமாக இந்த பண்ணி காணப்பட, இதனை ‘சிர் பட்டி' என்றும் அழைப்பர். அப்படி என்றால், ‘பேய் ஒளிகள்' என அர்த்தமாகும். இந்த விளக்கப்படாத நிகழ்வுகளால் ஒளியின் நிறமானது மாறி 8 மனிக்கு பிறகு மிளிர்கிறது. நிலத்திலிருந்து பத்து அடி மேலே காணப்படுகிறது இந்த ஒளி. உப்புத்தன்மை உட்செலுத்துதல் மற்றும் பாலைநிலமாதல் ஆகிய பிரச்சனைகளாலும் இவ்விடம் பாதிப்புக்குள்ளாகிறது.

UdayKiran28

 நாராயன் சரோவர் வனவிலங்கு சரணாலயம்:

நாராயன் சரோவர் வனவிலங்கு சரணாலயம்:

இந்த சரணாலயத்தில் பதினைந்து வகையான அச்சமூட்டும் விலங்கினங்கள் காணப்பட, இவ்விடம் பாலைவனம் போன்றே பெரும்பாலும் காட்சியளிக்கிறது. இதனை சிறுத்தைகளின் சில இனங்களுக்கு வாழ்விடமெனவும் WWI கண்டறிந்துள்ளது.

இந்த நாராயன் சரோவர் வனவிலங்கு சரணாலயத்தில் பல பொதுவான விலங்குகளும், முதன்மை இனங்களும் காணப்பட, அதனை ‘சிங்கரா' என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய விலங்கினங்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை இந்த பாலைவனமான இடத்தில் வாழவும் பழகிக்கொள்கிறது. அதனால், வேறு எங்கும் காண இயலாத பல விலங்கினங்கள் இங்கே காணப்படுகிறது. மேலும், இங்கே 184வகையான பறவைகளும் காணப்படுகிறது.

 கட்ச் புஸ்டார்ட் சரணாலயம்:

கட்ச் புஸ்டார்ட் சரணாலயம்:


க்ரேன் போன்ற நீண்ட கழுத்தை கொண்ட பறவையானது இங்கே காணப்பட இதனை சிறந்��� இந்திய புஸ்டார்ட் என்றழைக்கப்படுகிறது. மேலும், நீண்ட கால்களை கொண்ட நெருப்புக்கோழி போன்ற பறவையும் காணப்பட, இதனை உள்ளூர் மக்களால் ‘கோரட்' என அழைக்கப்படுகிறது. இது நிலத்தில் வாழும் ஓர் பறவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த இந்திய புஸ்டார்ட் பறவைக்கு பெயர் பெற்ற இந்த கட்ச் புஸ்டார்ட் சரணாலயமானது 1992ஆம் ஆண்டு இந்த பறவைகளுக்கு வீடாக ���ாணப்பட தொடங்கியது. அழிந்துவரும் பல பறவை இனங்களை கொண்டிருக்கும் இந்த இடம், பறவைகளுக்கான தனித்துவமிக்கதொரு இடமாகவும் காணப்படுகிறது. இருப்பினும் இத்தகைய பறவைகளானது மற்ற நாடுகளிலும் காணப்பட இந்தியாவில் இங்கே காணுவது நம் கண்களை குளிரூட்டுகிறது.

https://forests.gujarat.gov.in/

 பூஜியோ டுங்கர்:

பூஜியோ டுங்கர்:

புராணத்தின்படி...நாகா பழங்குடியினரால் இந்த கட்ச் பகுதி ஆட்சி செய்யப்பட்டு வந்ததாக தெரியவர, சேஷப்பட்னா, சாகை ஆகியவற்றின் இராணியுடன் பெரியா குமார் கைக்கோர்த்து புஜங்கா குமாரை தூக்கிவிட்டதாக சொல்லப்பட, அவர் தான் நாகா பழங்குடியினரின் கடைசி தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்போரினை வென்ற பூஜாங்க குமார், அதன் பின் இந்த மலையில் வாழ்ந்ததாகவும், அதனாலே இதனை பூஜியா மலை என்றழைக்கப்படுவதாகவும் தெரிகிறது. ���வர் பழங்குடியினரின் தெய்வமாக பூஜாங்கா எனப்படும் நாகத்தை வணங்கியதாகவும் தெரியவருகிறது. ஜடேஜாக்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு கோட்டையானது காணப்பட, இந்த மலையில் பூஜாங்க் ஆலயமும் காணப்படுகிறது.


Bhargavinf

 மாதா நோ மாத்:

மாதா நோ மாத்:

ஆஷப்புரா மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயமானது அக்கிராமத்தில் மிகவும் பெயர் பெற்ற ஒரு இடமாகும். ஜடேஜாவின் புரவலர் தெய்வமாக இவ்விடம் விளங்க, கட்ச் மாநிலத்தின் முன்னால் ஆட்சியாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூஜ்ஜிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் காணப்பட, 1819ஆம் ஆண்டு இந்த ஆலயமானது நிலநடுக்கத்தில் சேதமடைந்து காணப்பட்டு பின் மீண்டும் கட்டப்பட்டது.

இவ்விடம் 58அடி நீளத்தில் காணப்பட, 32 அடி அகலமும், 52அடி உயரமும் கொண்டு காணப்பட, ஆலயமானது 2011ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தில் மீண்டும் சேதமடைந்து போனது. அதன்பிறகு மீண்டும் சிறிய கால அவகாசத்தில் இந்த ஆலயமானது சீரமைக்கப்பட, நவராத்திரியின் பொழுது கட்சின் ராவோவால் 7 ஆண் எருமைகள் தரப்படுவதாகவும், ஆனால் இந்த பயிற்சியானது இன்று நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் தெரிய வருகிறது.

Raman Patel

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்