» »கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்

கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்

Written By: Balakarthik Balasubramanian

சாலைவழிப் போக்குவரத்தின் சிறந்த ஒருப் பயணமாகக் கருதப்படுவது பெங்களூரிலிருந்து மங்களூர் வரை ஆகும். மங்களூரில் காணப்படும் அற்புதமானப் பலக் கடற்கரைகள், நம் கால்களை ஈரமாக்குவதுடன் மனதினையும் மண்ணால் வருடிச் செல்கிறது. நாம் மூன்று நாள் பயணமாக இந்த இடங்களைக் கண்டு நம் உள்ளத்தினை மேலும் இதமாக்க, இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.

மாணவர்களுடனும், குடும்பங்களுடன் இந்தப் பகுதிகளைக் காண ஒரு அற்புதமான நேரம் மார்ச் என்று கூறுவதில் நாம் பெருமைக் கொள்ளலாம். ஒவ்வொரு வருடத்தின், இந்தக்காலக்கட்டத்தில் தான் மாணவர்களை தேர்வுகள் அரவணைத்து வழி நடத்தி இறுக்கிச் செல்லும். அதனால், அவர்கள் தங்களுடையத் தேர்வினை முடித்துக் குடும்பங்களுடன் அந்தக் கோடைவிடுமுறையினைக் களிக்க இந்த மார்ச் மாதம் அவர்களுக்கு உதவி செய்கிறது என்றேக் கூறவேண்டும். அவர்கள் முன்கூட்டியே இந்தப் பகுதிகளைப் பார்ப்பதற்கு முடிவெடுத்து செல்லும்போது அவர்கள் காணும் காட்சிகள் கவர்ந்துக் கண்களை குளிரூட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். புதிய இடங்களை ஆராய்ந்து அவற்றின் அழகினைக் கண்களாலே நாம் படம் பிடிக்க, அது நம் மனதினை விட்டுக் காலத்திற்கும் அழியாத ஒரு பொக்கிஷமாக மாறுகிறது. அதேபோல் கர்நாடக பகுதியில் காணப்படும் கடற்கரையும், அங்கு வீசும் காற்றும் நம் மனதினை அமைதியால் ஒருங்கிணைக்க உதவுகிறது.

கர்நாடகாவின் கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படும் மதவேறுபாடும், அழகிய உணவு முறையும், கவர்ச்சியான அமைவிடங்களும் நம் மனதினை மேலும் ஆச்சரியப்படுத்துகிறது. வரலாற்று ரீதியாகக் கூறப்படுவது என்னவென்றால், எல்லைகளில் காணப்படும் இராணுவத்துறை முகாமும், வர்த்தக மையங்களும் போர்த்துகீசியத்திலிருந்து வந்த பழம்பெருமை வாய்ந்த வெளிநாட்டவரான திப்பு சுல்தானால் நல்ல முறையில் பாதுக்காக்கப் பட்டு வந்தது எனவும் கூறப்படுகிறது.

கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்

கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்

அந்நியர்கள் அற்ற நம் சாலைப் பயணத்தில் குடும்பங்களும், குடும்பத்தில் உள்ள சிறுக் குழந்தைகளின் குதூகலங்களும் இருக்க நட்பு வட்டாரத்தின் ஆரவாரத்துடன் நாம் சொந்த வாகனத்தில் பயணிக்க, அது நமக்கு இன்னும் வலிமையைச் சேர்த்து நம் மனதினை இன்பம் கொண்டு ஆள்கிறது. நாம் பயணத்தின் சிறப்பம்சமாக, இங்கு இருக்கும் கடற்கரைகளை நீங்கள் நினைத்தால், சன் ஸ்கீரீன் எனப்படும் சூரியத்திரை, செயற்கை தன்மைக்கொண்ட கடற்கரை ஆடைகளை எடுத்து செல்வது (நீச்சல் உடைகள்) நமக்கு அவசியமாகிறது. ஏனென்றால், இத்தகைய ஆடைகள் ஈரப்பதத்தினை உறிஞ்சி மிகவும் எளிதில் காய்ந்துவிடும் தன்மைக்கொண்டது என்பதனால் நம்முடையப் பயணத்தினை மேலும் இனிமையாக்குகிறது.

PC:Riju K

நாள் 1 – பிலிக்குளா உல்லாசுல்தான் பாத்தேரி - தண்ணீர்பவி :

நாள் 1 – பிலிக்குளா உல்லாசுல்தான் பாத்தேரி - தண்ணீர்பவி :

சாலைப்பயணித்தின் ஒரு ஆதிப்புள்ளியாகக் காலைப்பொழுது இருக்க, போக்குவரத்து இடையூறுகளை நாம் தவிர்க்கலாம். ஆம், காலை 6 மணிக்குப் புறப்பட்டு நம் வண்டியினைத் தேசிய நெடுஞ்சாலை 75இன் வழியாகச் செலுத்த, துமுக்கூரு மற்றும் ஹாசனை நம்மால் விரைவில் அடைய இயலும். நம்முடையக் காலைச்சிற்றுண்டியை ஹாசனில் உண்டு மகிழ்ந்துப் பின் புறப்பட, மங்களூரின் பிலிக்குளா நிசர்க தாமாவை நம்மால் மதிய உணவு நேரத்தின் போது அடைந்துவிட முடிகிறது.

இந்த இடத்தில் காணப்படும் உயிரியல் பூங்காவும், கேளிக்கை பூங்காவும், நீர் பூங்காவும் மிகவும் மகிழ்ச்சித் தரக்கூடிய ஒன்று. நம் பயணத்தில் இருக்கும் சின்னஞ்சிறியக் குழந்தைகளின் கண்களில் இங்குள்ள விலங்குகள்பட அவற்றை ஆர்வத்துடன் அவர்கள் ரசிப்பார்கள் என்று நாம் மகிழ்ச்சிப்பொங்க வார்த்தைகளை உதிர்க்கலாம். அங்கிருந்து அரை மணி நேரத் தோராயப் பயணத்தின் வாயிலாக நம்மால் உல்லால் கடற்கரையினை அடைய முடிகிறது. அந்தக் கடற்கரையின் சிறிய அலைகள் நம்மை நோக்கி வந்துப் பார்த்து அழைப்பை விடுத்துச் செல்ல, அந்த கடுங் கதிரவனின் வெப்பத்தினையும் பொருட்படுத்தாமல் அந்தப் பாதுகாப்பானச் சிறிய அலைகளில் இறங்கி விளையாட நம் மனம் ஏங்குகிறது.

கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்

கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்

அந்த அலைகளில் நீந்தி நாம் விளையாடி முடித்து பின் மனம் இல்லாமல் உடைகளை மாற்றிக்கொண்டு புறப்பட, நாம் சுல்தான் பத்தேரிக் கோட்டையை அடைகிறோம். இந்தப் பகுதியில் அயல் நாட்டவரின் ஊடுருவலைத் தவிர்க்க அரணாகத் திகழ்வது இந்தக் கடற்கரையே ஆகும். இந்தக் கோட்டையின் வெளியில் நின்று அதன் அழகை ரசிக்க, அழகு மட்டும் அல்லாமல் கடற்கரையின் குளிர்ந்த காற்றும் நம்மை மேலும் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.

மேலும், இந்தக் கோட்டையை உள் சென்று ரசிக்க, நம்மை அறியாமலே கரங்களால் புகைப்படக்கருவியை எடுத்து அழகினை படம் பிடிக்கும் அளவுக்கு இந்தக் கோட்டை நம்மை வசீகரித்து மனதினை ஆள்கிறது. ஐந்து ரூபாய்க்கு என்ன கிடைக்கும் என நாம் நினைக்கும் அளவுக்குக் காலம் முன் நோக்கி நம்மை இழுத்துச் செல்ல, இங்கு நாம் பார்க்கும் பெர்ரி சவாரியின் மூலம், வெறும் ஐந்து ரூபாயில் சுல்தான் பாத்தேரியிலிருந்து தண்ணீர்பவிக் கடற்கரை வரைச் செல்ல, நம் மனம் திரும்பிவர மறுக்கும் என்றே கூறவேண்டும்.

நாங்கள் படகு எடுத்து நகர்ந்தப் பொழுதுக் கதிரவன் எங்களைக் கண்டுவிட்டு மகிழ்ச்சியுடன் மெல்ல மறைய, அந்தக் காட்சி எங்கள் உள்ளத்தினை கொள்ளைக்கொள்ள செய்தது. அந்தத் தண்ணீர்பவி கடற்கரையில் நாங்கள் கண்ட அந்தக் காட்சி, எங்களுக்கு தந்தச் சிற்றுண்டியை (அழகை) ரசித்துக்கொண்டே, அந்த ஆவிப்பறந்துக்கொண்டிருந்தத் தே நீரை சுவைக்க, அந்த உணர்வினை நம்மால் ஒருபோதும் வர்ணிக்க இயலாத ஒன்றாக எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மங்களூரில் நாங்கள் ஓய்வுக்குச் செல்லும்முன்பே இத்தகைய கண் கொள்ளாக் காட்சியினைக் கண்ட எங்கள் கண்கள், அடுத்த நாள் பயணத்தின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியது.

PC: pilikula

நாள் 2: பனம்பூர் – சூரத்கால் கௌப் :

நாள் 2: பனம்பூர் – சூரத்கால் கௌப் :

நீங்கள் தண்ணீரைக் கண்டால் மனம் துள்ளிக்குதிக்கும் ஒருவரா! அப்படி என்றால், இந்தப் பனம்பூர் கடற்கரையின் பயணம் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றாகக் கண்டிப்பாக அமையும். அங்கிருக்கும் விடுதி ஊழியர்களின் ஆலோசனைக்கு இணங்க பனம்பூரை அதிகாலை 7 மணிக்கு முன்பே நாம் அடைவது கூட்ட நெரிசலைச் சமாளிக்க உதவுகிறது. இந்தக் கடற்கரைப் பார்ப்பதற்கு அழகாகவும், தூய்மையாகவும் இருக்க நம் மனம் அதில் இறங்கி விளையாட மிகவும் ஆசைக்கொள்ளும்.

அந்த ஆசைக்கு அடிக் கல்லாக இங்குக் காணப்படும் படகு சவாரியும், ஜெட் ஸ்கில்லிங்கும், ஒட்டக சவாரியும் எனப் பற்பலப் பொழுதுபோக்கு அம்சங்கள் நம்மை அந்தக் கடற்கரையிலே வெகு நேரம் சுற்ற வைத்துவிடுகிறது. இந்தக் கடற்கரை யாரைக் கவரும் என்பதனைவிடக் குழந்தைகளைக் குதுகலத்தில் துள்ள வைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்

கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்


கடற்கரையில் பறக்கும் எண்ணிலடங்காப் பட்டங்கள், நம் கண்களை வெகுவாகக் கவர்கிறது. தண்ணீரில் இறங்கி விளையாடி அதனை விட்டு வெளியில் வரும் நம் மனம், ஒரு மனதாகக் கரையை ஏறி காலை உணவிற்கு கூட்டத்துடன் கூட்டமாகத் தயாராகிறது. இதயம் கணிந்த அந்த உணவினை உண்ட பின் விடுதிக்கு சென்று ஒரு நல்ல செயற்கை குளியலை முடித்து பின் நம் மனம் சுரத்கால் கடற்கரையினைப் பார்க்க விரைகிறது.

இந்தக் கடற்கரையை, பனம்பூரிலிருந்து 10 நிமிட நடைப்பயணத்தின் வாயிலாக நம்மால் அடைய முடிகிறது. ஆனால், பனம்பூரினை விடக் குறைவானக் கூட்டத்தினை காணும் நம் கண்கள் ஆச்சரியத்தின் எல்லைக்கு செல்லும். இங்குக் காணப்படும் வெள்ளை நிற மணல்கள் நம்மை வருட, தூய்மையானத் தண்ணீரின் இதம், மனதினை ஈரமாக்குகிறது. அதேபோல் அந்தக் கடற்கரையின் பின் காணப்படும் அழகியக் கலங்கரை விளக்கமும், கடல் படுக்கையில் காணப்படும் நட்சத்திர மீன்களையும் வைத்தக் கண்கள் வாங்காமல் நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

PC: Karunakar Rayker

கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்

கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்

நாம் கடலில் நேரத்தினை இன்பமாகச் செலவிட்டு பின் கரையில் காற்றாட நடக்க, நம் மனம் அமைதியின் உச்சத்தில் துள்ளிக் குதிக்கிறது. நாம் ஒரு உள்ளூர் உணவகத்தினைத் தேடி அமர்ந்து நம் மதிய உணவினை வகைப்படுத்த, அங்குப் பிரசித்திப்பெற்ற ஒன்றான மங்களூர் மீன் குழம்பின் சுவையும் சாதமும் நம் நாக்கில் எச்சிலைச் சுரக்க வைக்கிறது. நம் மதிய உணவினை வயிற்றில் நிரப்பி நாம் கிளம்ப, கௌப் கடற்கரையில் நாம் காணும் அந்த அழகியக் கதிரவன் மறையும் காட்சி, நம் மனதினை அமைதிப்படுத்தி அந்தக் காட்சி மீண்டும் பின் நோக்கி நம்மை அழைத்துச் சென்றுத் தண்ணீர்பவி கடற்கரையினை நினைவுப்படுத்தும் என உறுதியாகச் சொல்லலாம்.

இந்தக் கடற்கரை மேலும் புகைப்படம் எடுப்பதற்கு ஏதுவாக அழகாக காட்சியினைப் பறிமாற, சாப்பிட்ட மதிய உணவு மறந்து, மெய் மறந்து அந்தக் காட்சியினை நாம் ரசிக்கச் செய்கிறது. அந்தப் புகைப்படத்தின் அழகை ரசிக்கும் நம் கண்கள் மட்டுமே உணர்வுக்கொண்டு பேச, வாய் ஊமை ஆகி வார்த்தை அற்றுத் தவிக்கிறது. வானம் சிவப்பு நிறத்தால் வண்ணக்கோலமிட, அந்தக்காட்சியினைக் காணும் நம் கண்கள் அசைய மறந்து அப்படியே ஆச்சரியத்துடன் நோக்குகிறது. நீ என்ன மாயாஜாலம் செய்பவனா! என் கண்களை கட்டிப்போட்டுவிட்டாய் என வானத்தைப் பார்த்து மனம் வியப்படைகிறது.

PC: Hari Prasad Nadig

நாள் 3: ஸ்ரீ கிருஷ்ணா ஆயம சைன்ட் மாரித் தீவு மால்பே :

நாள் 3: ஸ்ரீ கிருஷ்ணா ஆயம சைன்ட் மாரித் தீவு மால்பே :

மூன்றாம் நாள் தொடக்கத்தில் மிகவும் உற்சாகத்துடன் 60 கிலோமீட்டர் தொலைவில் சென்று உடுப்பியில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஆலயத்தினை காணும் நம் கண்கள், பக்தி நோக்கி பிரயாணிக்கிறது. அங்குக் காணப்படும் அலங்கரிக்கப்பட்ட அழகிய கிருஷ்ண சிலை நமக்கு ஆசியைத் தர, நம் மனம் கவலைகளை மறந்து அமைதியடைகிறது. இந்தக் கோயிலின் சிறப்பம்சமாகக் கருதப்படும் கனகன்ன கிண்டி மிகவும் பேசுப்படும் ஒன்றாகும். ஆம், கிருஷ்ணாவின் தீவிர பக்தையான கனகதாசாவுக்கு ஒரு சிறியச் சாளரத்தின் வழியாக ஸ்ரீ கிருஷ்ணர் தரிசனம் வழங்கிய ஒரு இடமே இந்தக் கனகன்ன கிண்டி எனப்படுகிறது.

இந்தத் தெய்வீகத் தரிசனத்தில் மூழ்கி எழுந்து நாம் செல்ல, பிரசித்திப்பெற்ற சைன்ட் மாரித் தீவு நம்மை அன்புடன் வரவேற்கிறது. உடுப்பியில் உள்ள மால்பே கடற்கரையில் நான்கு திட்டுகளாக தீவு அமைந்திருக்கும் அழகிய இடம் தான் சைன்ட் மாரித் தீவு. இந்தத் தீவின் பெருமையாகப் பேசப்படுவது என்னவென்றால், எரிமலை அனலைக் கக்க, அதனால் தீ வெளிப்பட அதனைத் தடுக்க அடுக்கப்பட்டப் பாறைகளைப் பற்றியே அனைவரும் பேசுகிறார்கள். ஆம், இந்தப் பாறைகள் மிகவும் பெரியது மட்டும் அல்லாமல், புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தப் பாறைகள் மடகாஸ்கர் கண்டப்பெயர்ச்சியின் கணக்கீட்டினை நாம் தெரிந்துக்கொள்ளப் பயன்படுத்தப்படுகிறது.

கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்

கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்

மதிய உணவினை முடித்துப் பயணம் நிறைவேறப் போகும் ஒரு சிறியக் கவலையுடன் நாம் கடைசியாக காணப்போகும் ஒரு இடம் தான் மால்பே கடற்கரை ஆகும். இதனை "சூரிய அஸ்தமன கடற்கரை" என்றும் கூறுவர். மற்ற இடங்களுக்கு ஒற்ற இதன் அழகு, நம் கவலையை நொடிப்பொழுதில் மறக்கவைத்துத் துள்ளிக்குதிக்க வைக்கிறது. இங்கு நாம் காணும் கதிரவன் அஸ்தமனமும் மனதினை நெகிழ்ச்சிக்கொள்ள செய்யும் ஒன்றாகும். இருப்பினும், நமக்குக் குறுகிய நேரமே இருக்கத் தேனீரைப் பருகிவிட்டு சிற்றுண்டிகளை உண்டுவிட்டுக் கதிரவன் மறையும் முன்பேக் கவலையுடன் நீங்காவிடைப்பெற்றுப் பெங்களூருக்கு புறப்படுகிறோம்.

நாம் திரும்பி செல்லும் வழியில், அடிவானத்தில் கதிரவன் மறையும் அந்தக்காட்சியினை கண்ட நம் மனம், கால்களை கடற்கரையில் நனைத்த ஒன்றினை நினைத்துப்பார்த்து அந்த செவ்வான கதிர்களின் அழகை ரசித்து ஏக்கத்துடன் அந்த அழகிய இடத்தினைத் தாண்டி மனதினை மட்டும் அங்கேயே விட்டு, நினைவுகளை மட்டும் சுமந்து செல்கிறது.

PC: Bailbeedu

Read more about: travel