Search
  • Follow NativePlanet
Share
» »ஸிரோ பள்ளத்தாக்கு - அருணாச்சல பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சொர்க்கம்…போகலாமா!

ஸிரோ பள்ளத்தாக்கு - அருணாச்சல பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சொர்க்கம்…போகலாமா!

ஸிரோ பள்ளத்தாக்கு - அருணாச்சல பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சொர்க்கம்…போகலாமா!

By Balakarthik Balasubramanian

இட்டாநகரிலிருந்து 115 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அழகிய நகரம் தான் இந்த ஸிரோவாகும். இந்த இடம் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகவும் சிறந்து விளங்குகிறது. இந்த நகரத்தில் காணப்படும் அழகிய சூழல், நம் கண்களுக்கு காட்சிகளால் விருந்து படைக்க, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் பட்டியலில் இந்த நகரமும் இடம்பெற்றுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஸிரோ மலைப்பகுதி, மூங்கில் மரங்களாலும், பைன் மரங்களாலும் கவர்ந்து இருப்பதோடு வயல் வெளிகளாலும் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நகரம், அபத்தானி பழங்குடியினரின் வாழிடமாகவும் விளங்கி நட்பு நீங்கா தன்மையுடன் அவர்கள் நாடோடி வாழ்க்கையை நமக்கு தெளிவு படுத்துகிறது.

அபத்தானி பழங்குடியினரின் சிறப்பம்சமாக, அங்குள்ள பெண்கள் முகத்தில் பச்சை குத்திகொள்ளும் ஒரு பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர் என்பதை நாம் தெரிந்துகொள்கிறோம். இவ்வாறு அங்குள்ள பெண்கள் காணப்பட, முகத்தில் குத்தப்பட்டிருக்கும் பச்சையானது அவர்கள் முகத்தை வசீகரிக்க செய்வதாகவும் நம்பப்படுகிறது. இத்தகைய அடையாளத்தால், மற்ற பழங்குடியினரின் பார்வை ஈர்ப்பிலிருந்து அங்குள்ள பெண்கள் காப்பாற்றப்படுவதாகவும் நம்பப் படுகிறது.

இந்த ஸிரோவை நாம் காண சிறந்த நேரம்:

இந்த ஸிரோவை நாம் காண சிறந்த நேரம்:

கோடைகாலத்தில் காணப்படும் கிளீமென்ட் காலநிலையால், இந்த இடம்... விடுமுறைக்கு ஏற்ற ஓர் சிறந்த இடமாக அமைகிறது. கோடைக்காலத்து மாதங்களான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களை தவிர்த்து, இந்த ஸிரோவை நம்மால் வருடம் முழுவதும் பார்த்து இனிமையானதோர் உணர்வினையும் பெற முடிகிறது.
ஒருவேளை, நீங்கள் செல்லும் மாதமானது செப்டம்பராக இருக்குமெனில், வருடாவருடம் இந்த மாதத்தில் கொண்டாடப்படும் ஸிரோ இசை நிகழ்ச்சி விழாவில் பங்கேற்க மறந்துவிடாதீர்கள்.

Radhe tangu

ஸிரோ இசை விழா:

ஸிரோ இசை விழா:

இந்த நகரத்தில் காணப்படும் இசை பிரியர்களின் எண்ணிக்கையை நம்மால் விரல்களை கொண்டு எண்ணிவிட இயலாது. இவர்கள் பெற்றெடுத்த இசையை சிறப்பிக்கும் வகையில், இங்கே ஸிரோ இசை விழா என்ற ஒன்று 2012இல் மீண்டும் ஆரம்பமானது. இந்தியாவில் சிறந்த வெளிப்புற இசை திருவிழாக்களுள் ஒன்றான இந்த விழாவால்... இசையால் மக்கள் மனம் மகிழ்ந்து இந்த இடத்திலே தன் மனதை தொலைக்கின்றனர். குறிப்பாக, இசை பிரியர்களுக்கு ஈடு இணையற்ற இன்பத்தை வழங்கும் ஓர் விழாவாக இந்த ஸிரோ இசை விழா அமைகிறது.

இசை ஆர்வலர்கள் கூடும் வகையில், அமைதியான இடத்தில் இந்த இசை விழா அரங்கேற, இந்த விழாவானது உலக இசை பிரியர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இன்பத்தில் தள்ளுகிறது. செப்டம்பர் மாதத்தில் தொடர்ந்து 4 நாட்கள் நடக்கும் இந்த விழாவில்...காலை மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறி நம் கண்களை கொள்ளை கொள்ளும்.


Tauno Tõhk

இசை

இசை

இந்த விழாவில் இசைக்கும் வகைகளானது., இண்டி, மாற்று, இணைவு, பங்க், ராக் ஆகியவையாக இருக்க, சில நேரங்களில் சில கன உலோகங்களின் கனீர் அழகு இசையும் நம்மை கவர்கிறது. வடகிழக்கு இந்திய குழுக்கள் அதிகம் கூடும் இந்த இசை விழாவானது...மற்ற தேசிய மற்றும் சர்வதேச குழுக்களையும் வரவேற்க காத்துகொண்டிருக்கிறது.

இந்த ஸிரோ விழாவில் பங்கேற்கும் தெரிந்த கலைஞர்கள்/குழுக்களான ஷாயர் மற்றும் பங்க், ஸ்டீவ் ஷெல்லி, மென்ஹூபாஸ், ஸ்க்ராட், ஆகியோர்கள் அனைவராலும் அறிந்த சிலர் ஆவார்கள்.

இந்த இசை விழாவின் மூலமாக, வடகிழக்கு இசைக்கலைஞர்களின் திறமை மட்டும் வெளிப்படுவதில்லை. அத்துடன், வடகிழக்கு மாநிலத்தின் சுற்றுலா ஆர்வலர்களின் எண்ணிக்கையும் இந்த விழாவால் அதிகரிக்கிறது என்பதே உண்மை.

இங்கே நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களும், இந்த ஸிரோவில் நாம் பார்க்க வேண்டிய சில இடங்களையும் பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம்.

Sonara Arnav

ஸிரோவின் முகாம்:

ஸிரோவின் முகாம்:


உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும்...இந்த ஸிரோவானது, பசுமை நிறைந்த பகுதிகள் கொண்டு, நம் சுவாசத்தை புத்துணர்ச்சிகொள்ள செய்யும் ஒரு அழகிய நகரமாகும். இந்த நகரம் முழுவதும், பசுமையான புல்வெளிகள் பரந்து விரிந்து எங்கும் காணப்பட, இங்கிருக்கும் சிறுகுன்றை நாம் "ஸிரோ பூட்டோ" என்றழைக்கிறோம். அதனால், இங்கே கூடாரம் அமைத்து நாம் தங்குவதன் மூலம், நம்மால் இந்த இடத்தின் உட்புற இயல்பை உணர முடிகிறது.

இங்கே நாம் கூடாரம் அமைக்க...அதிகாரப்பூர்வ ஸிரோ முகாமையும் நாம் அனுகலாம். இல்லையென்றால், நாம் சொந்த கூடாரத்தையும் அமைத்து கொள்ளலாம். மேலும், இங்கே உள்ளூர் கூடார சேவைகளும் நிறையவே காணப்படுகிறது. அவர்கள், நமக்கு...வெவ்வேறு அளவில் கூடாரம் அமைத்து தருவதோடு, மற்ற இதர வசதிகளையும் செய்து தருகின்றனர். இந்த அழகிய புல்வெளியில் கூடாரம் அமைத்து நாம் ஜோடியாக புத்துணர்ச்சி அடைய, அந்த இனிமையான அனுபவத்தை ஸிரோவை தவிர வேறு ஒரு இடம் தருமா? என்பது சந்தேகமே...

MIKI Yoshihito

நாம் சுவைத்து பார்க்க வேண்டிய உணவு எது?

நாம் சுவைத்து பார்க்க வேண்டிய உணவு எது?

நீங்கள் வெவ்வேறு இடத்திற்கு சென்று...புதுவித உணவுகளை சுவைத்து மகிழ ஆசைக்கொள்பவர் என்றால், பட்டுப்புழுக்கள் மற்றும் எலிகள் கொண்டு தயாரிக்கப்படும் உள்ளூர் ஸிரோ உணவை ருசித்து பார்க்க மறந்துவிடாதீர்கள். இந்த வினோதமான உணவை...வேண்டாம்! வேண்டாம் என்று நீங்கள் கூறினால், இன்னும் நிறைய உணவுகள் வரிசை கட்டி உங்களை வரவேற்று சுவைக்க தூண்டும் என்பதில் ஐயம் வேண்டாம்.

மூங்கில் சிக்கன் எனப்படும் உள்ளூர் உணவை நீங்கள் சுவைத்து பார்க்க வேண்டியது அவசியமாகும். நீங்கள் அதனை சுவைத்து பார்த்து விரும்பி மகிழ்ந்தால், இந்த இடத்தின் ஸ்பெஷலான ரைஸ் பீரையும் சாப்பிட மறந்துவிடாதீர்கள்.

Seungbeom Kim

ஸிரோவை நாம் அடைவது எப்படி:

ஸிரோவை நாம் அடைவது எப்படி:


அழகிய காட்சிகள் நிறைந்த இடங்களை கொண்ட இந்த ஸிரோவிற்கு நாம் பயணம் செய்ய, எந்த ஒரு பேருந்தோ...இரயில் அல்லது விமான போக்குவரத்தோ நேராக இல்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

விமானத்தின் மூலம்:

அருகில் காணப்படும் ஒரு விமான நிலையம் கவுஹாத்தி சர்வதேச விமான நிலையமாகும். இந்த விமான நிலையம், இந்தியாவின் முக்கிய நகரங்களான தில்லி, பெங்களூரு, மும்பை என பல நகரங்களை இணைத்து சேவை புரிகிறது.

இரயிலின் மூலம்:

விமான நிலையத்திலிருந்து, இரயில் மூலம் நகர்லாகுன் இரயில் நிலையத்துக்கு நாம் செல்ல வேண்டும். இந்த இரயில் நிலையம் தான் ஸிரோவுக்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு நிலையமாகும். அதற்குமாறாக, கத்தல் புக்ரி வரைக்கும் நாம் இரயிலிலும் பயணிக்கலாம். நகர்லாகுனிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் தான் இது அமைந்திருக்கிறது.

சாலை வழித்தடம் மூலம்:

இரயில் நிலையத்திலிருந்து ஸிரோ வரைக்கும் நம்மால் பேருந்து வசதியை பெற்று பயனடைய முடிகிறது. ஆம், இந்த பேருந்து பயணத்துக்கு சுமார் 6 லிருந்து 8 மணி நேரம் வரை நமக்கு ஆகிறது. (அல்லது) கவுஹாத்தியிலிருந்து டாக்சியின் மூலமாகவும் நாம் ஸிரோவை அடையலாம். சாலை வழி போக்குவரத்து சிறந்ததாக அமைய, தேசிய நெடுஞ்சாலை 27 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 15 இன் வழியாக நாம் பயணிக்கலாம்.

Ashwani Kumar

 ஸிரோவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள்:

ஸிரோவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள்:

பல்லுயிரினம் அதிகம் கொண்ட ஒரே காரணத்துக்காகவே இந்த அழகிய இடத்தை நாம் காண செல்லலாம். அதோடு மட்டுமல்லாமல், இந்த ஸிரோவில்...டால்லி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம், ஹப்போலி ஆகியவையும் நகரத்தின் நடுவில் அமைந்து நம்மை சிலிர்க்க வைக்கிறது. மேலும், ஸிரோ பூட்டோ மற்றும் டோலோ மான்டோ குன்றுகள் மற்றும் மேக்னா குகை கோயில் ஆகியவையும் இதன் அருகில் அமைந்து நம்மை ஆர்ப்பரிக்க வைக்கிறது.

ஸிரோவின் கண் கவர் இடமான சித்தேஷ்வரனாத் ஆலயம், பழங்காலத்து பெருமையை உணர்த்தும் வகையில், ஒரு தசாப்தம் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட. இயற்கை சிவலிங்கத்தை கொண்டு நம்மை வியப்பில் தள்ளுகிறது.

Krish9

Read more about: travel temple tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X