Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதய்பூர் (திரிபுரா) » ஈர்க்கும் இடங்கள் » புவனேஷ்வரி கோவில்

புவனேஷ்வரி கோவில், உதய்பூர் (திரிபுரா)

10

புவனேஷ்வரி கோவில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் நாவலான 'ராஜரிஷி', மற்றும்  நாடகமான 'பிஸ்ஹ்ஹர்ஜன்' போன்றவற்றில் இடம் பெற்று அழிவற்ற புகழைப் பெற்றுள்ளது. இந்தக் கோவில் கோமதி ஆற்றின் கரையில் அழிவின் விழிம்பில் உள்ள பண்டைய அரண்மனைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

புவனேஷ்வரி கோவில், மகாராஜா கோவிந்தா மானிக்யாவினால் 17 ஆம் நூற்றாண்டில் அன்னை புவனேஸ்வரிக்காக கட்டப்பட்டது. இந்தக் கோவில் கி.பி. 1660 மற்றும் 1675 க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அகர்தலாவிற்கு தலைநகர் மாற்றப்படுவதற்கு முன்னர் உதய்பூர், மானிக்யா வம்சத்தவரின் இருப்பிடமாகவும் பேரரசின் தலைநகராகவும் இருந்தது. இந்த அழகிய கோவில் மூன்று அடி உயரமுள்ள ஒரு தாழ்வாரத்தின் மீது கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோவில் நான்கு ச்ஹல்ல கூரை, நுழைவாயிலில் உள்ள ஸ்தூபம் மற்றும் கர்பககிரகத்தை உள்ளடக்கியது. பூ-வடிவமுள்ள சிற்பங்கள் தூண்கள் மற்றும் ஸ்தூபங்களை அலங்கரிப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.

இந்தக் கோவிலை திரிபுராவில் உள்ள  ஒரு முக்கியமான ஆன்மீகத் தளமாக கருதும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வருகை புரிகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed