ஹயாங்க் மலை உச்சி, உக்ருள் மாவட்டத்தில் உள்ள உயரமான சிகரமாகும். இது கடல் மட்டத்தில் 3114 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலை உச்சியானது இப்பிராந்தியத்தில் பாயும் நீரோடைகள், தொடரலையின் பள்ளத்தாக்குகள் மற்றும் வண்ணமயமான குக்கிராமங்களின் ஒரு முழுமையான கழுகுப்பர்வை காட்சியை நமக்கு அளிக்கிறது. இங்கிருந்து நாம் காணும் காட்சிகளை எளிய வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
மலை உச்சி வரை ட்ரெக்கிங் செல்வது உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த செயலாகும். அவ்வாறு ட்ரெக்கிங் செல்லும் பொழுது நாம் காணும் இனிய காட்சியானது நம்மை மெய் மறக்கச் செய்யும்.
அருகில் உள்ள சிரொய் கஸ்ங்க் உச்சிக்கான ட்ரெக்கிங், ஹயாங்க் உச்சிக்கான ட்ரெக்கிங்கை விட மிகவும் எளிது. எனவே ஹயாங்க் ட்ரெக்கிங் அவ்வளவாக பிரபலமாகவில்லை.
உக்ருளில் இருந்து ஹயாங்க் மலை உச்சிக்கு பயணிப்பது ஒன்றும் கடினம் அல்ல. மலையேற்ற ஆர்வம் உள்ள யாரும் நடந்தே சென்று விடலாம். அவ்வாறு இல்லையெனில், வேறு வாடகை வாகனங்கள் மூலம் உச்சியை அடையலாம்.



Click it and Unblock the Notifications