உணா மாவட்டத்தின் அம்லெஹர் கிராமத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாதலம் பாபா ருத்ரானந்த் ஆசிரமம் ஆகும். 'குஷோட்பாட்டினி அமாவசையை' முன்னிட்டு இங்கு நடத்தப்படும் வருடாந்திர திருவிழாவிற்காகவும், மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி, மகர சங்கராந்தி மற்றும் சிவராத்திரி போன்ற விழாக்களுக்காகவும் புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது.
நிர்ஜாலா ஏகாதாசி கண்காட்சி, பஞ்ச பீஷ்ம மேளா, வியாஸ் பூஜா மற்றும் பாபா ருத்ரு ஜெயந்தி ஆகிய கண்காட்சிகளும், விழாக்களும் இங்கே மிகுந்த ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன.
இந்த ஆசிரமத்தில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும், தங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடம் 150 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது என்று நம்பப்படும், 'அக்ஹண்ட தூணா' என்றழைக்கப்படும் நெருப்பிலிருந்து வரும் புனித சாம்பலுக்காக பெருமளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications