Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» வாகத்தோர் பீச்

வாகத்தோர் பீச் - வெள்ளை மணற்பரப்பின் பேரழகு!

15

வாகத்தோர் பீச்சிற்கு வெகு அருகிலேயே கோவாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான சப்போரா கோட்டையும், அஞ்சுனா கடற்கரையும் இருப்பதால் இந்த இடத்தை எப்போதும் சுற்றுலாப் பயணிகள் மொய்த்துக் கொண்டே இருக்கின்றனர். மேலும் இங்கு வரும் பயணிகள் இந்தக் கடற்கரையின் வெள்ளை மணற்பரப்பின் அழகில் தங்கள் மனதை பறிகொடுப்பது நிச்சயம்.

வாகத்தோர் பீச்சில் எண்ணற்ற உணவகங்களையும், குடில்களையும் நீங்கள் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக பிரிம்ரோஸ் என்ற குடிலில் பரிமாறப்படும் கோவான் உணவு வகைகளும், மற்ற பாரம்பரிய உணவு வகைகளையும் போல வேறெங்கும் நீங்கள் ருசித்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கடற்கரையில் உள்ள நைன் பார் என்ற இரவு விடுதியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

வாகத்தோர் பீச்சை மாபுஸா நகரிலிருந்து அடையும் வழி முழுக்க வரிசையாக அமைந்திருக்கும் பெரிய பெரிய மாட மாளிகைகளும், போர்த்துகீசிய கட்டிடங்களும் உங்களை அப்படியே சொக்க வைத்து விடும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மாபுஸா அல்லது அஞ்சுனா பீச்சுக்கு வாடகை காரில் வந்து இறங்க வேண்டும். அதன் பிறகு அந்த இடங்களிலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே வாகத்தோர் பீச் இருக்கிறது. அதேபோல் நீங்கள் கேண்டலிம் மற்றும் பாகா பகுதிகளிருந்து பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்தக் கொண்டு வாகத்தோர் பீச்சை வந்தடையலாம்.

வாகத்தோர் பீச் சிறப்பு

வாகத்தோர் பீச் வானிலை

சிறந்த காலநிலை வாகத்தோர் பீச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது வாகத்தோர் பீச்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu