Search
  • Follow NativePlanet
Share

வர்கா பீச் - பனை மரங்களும், வெண்மணல் பரப்பும்!

9

தெற்கு கோவாவில் உள்ள கோல்வா பீச் போன்ற பெரிய கடற்கரைகளுக்கு மத்தியில் சிறிய கடற்கரையாக இருந்தாலும் வர்கா பீச் அவற்றுக்கு எந்த வகையிலும் தரத்தில் குறைந்ததில்லை.

இந்த கடற்கரையில் வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களும், சூரிய கதிர்களில் மின்னிடும் வெண் மணலும் கண்களுக்கு விருந்து படைக்கும் அற்புதக் காட்சிகள். மேலும் இந்த விருந்தோடு சேர்த்து உங்களுக்காக கோவான் உணவும், காக்டெயில்களும் வர்கா பீச்சில் காத்துக்கொண்டிருக்கின்றன.

கோவாவின் குட்டிக் கடற்கரையான வர்கா பீச்சின் கரையோரத்தில் அமைந்திருக்கும் அழகிய சிறு கிராமமான வர்கா என்ற மீனவ கிராமத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகிறார்கள்.

இதன் காரணமாக வர்கா கடற்கரையில் நூற்றுக்கணக்கான பாய்மரங்கள் எந்நேரமும் நின்று கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்தக் கடற்கரைக்கு அருகில் உள்ள கோல்வா பகுதிகளில் கொண்டாடப்படும் ஃபாமா என்ற ஆண்டுத் திருவிழாவின் தாக்கம் வர்கா கிராமத்திலும் பிரதிபலிக்கும்.

அந்த சமயங்களில் வர்கா கிராமத்துக்கு பக்கத்து கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள்  படை எடுத்து வருவது போல் வருவார்கள். அப்போது வர்கா கிராமம் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலும் இந்த சமயங்களில் வர்கா கிராமத்துக்கு வரும் பயணிகள் அருகிலுள்ள பெநொவ்லிம் கடற்கரைக்கு சிறு உலா சென்று வரலாம்.

வர்கா பீச்சை பனாஜி போன்ற கோவாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் வாடகை கார்களின் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். அதோடு கோவா விமான நிலையத்திலிருந்து ஒரு சில நிமிடங்களில் நீங்கள் வர்கா பீச்சை அடைந்து விட முடியும். மேலும் வாஸ்கோடகாமா நகரமும் வர்கா பீச்சுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது.

வர்கா பீச் சிறப்பு

வர்கா பீச் வானிலை

சிறந்த காலநிலை வர்கா பீச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது வர்கா பீச்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue