ராதா கோகுல்நந்தா கோயில் கேசி காட் படித்துறைப்பகுதிக்கும் ராதா ராமன் கோயிலுக்கும் இடையே அமைந்திருக்கிறது. இந்த புராதனமான கோயிலில் ராதா, விஜய கோவிந்தா ஆகியோர் சிலைகள் காணப்படுகின்றன.
பழங்காலத்தில் இந்த தெய்வச்சிலைகள் யாவும் தனித்தனியாக பூஜிக்கப்பட்டு வந்தன. இருப்பினும் விஷ்வநாத சக்கரவர்த்தி இந்த கோயிலை கட்டியபின்னர் அந்த சிலைகள் யாவும் இங்கு ஒன்றாக வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.
இந்த கோயில் வளாகத்திலேயே நரோத்தாமா தாசர் மற்றும் கங்காநாராயாணா ஆகியோரின் சமாதிகளும் காணப்படுகின்றன. விருந்தாவன் நகரத்தில் உள்ள மற்ற பெரிய கோயில்களோடு ஒப்பிடும்போது இது சிறிய கோயில் என்றாலும் குறிப்பிடத்தக்க தனித்தன்மையுடன் வீற்றிருக்கிறது.



Click it and Unblock the Notifications