விருந்தாவன் நகரத்தில் உள்ள கிருஷ்ன ஜன்மபூமி கோயில் வளாகத்தில் இந்த பழமையான ஷீ ராதா ராஸ் பிஹாரி அஷ்ட சகி கோயில் அமைந்திருக்கிறது. ராதை, கிருஷ்ணர் மற்றும் ராதையின் எட்டு தோழியருக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.
புராணக்கதைகளின்படி விருந்தாவன் மற்றும் மதுரா நகரத்தில் உள்ள நந்தவனங்களில் கிருஷ்ணர் ராதையுடன் ராசலீலை எனப்படும் சிருங்கார விளையாட்டுகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள நந்தவனங்களில் இன்றும் குழலோசைக்கு ஏற்ப ஒலிக்கும் கொலுசு ஒலியை கேட்க முடிவதாக நம்பிக்கை நிலவுகிறது.
இந்த கோயிலில் உள்ள சிலைகளின் ஆடைகள் தினமும் பூஜைக்கு முன்னர் மாற்றப்படுகின்றன. இவற்றில் சில உடைகள் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. சில புதுப்பிப்புகள் இக்கோயிலில் செய்யப்பட்டிருந்தாலும் அன்றிருந்த பழமை மாறாமலேயே காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications