Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேற்கு கரோ ஹில்ஸ் » ஈர்க்கும் இடங்கள் » ஹஸ்ரத் ஷா கமல் பாபா தர்க்கா

ஹஸ்ரத் ஷா கமல் பாபா தர்க்கா, மேற்கு கரோ ஹில்ஸ்

33

ஹஸ்ரத் ஷா கமல் பாபா தர்க்கா இந்தோ-பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. துரா நகரத்திலிருந்து 80 கி.மி தூரத்தில் மேற்கு கரோ மலை மாவட்டத்தில் இந்த தர்க்கா ஸ்தலம் உள்ளது. 

16-ம் நூற்றாண்டில் மஹேந்த்ரநாராயண் எனும் மன்னரின் ஆட்சிக்காலத்தில் இது கட்டப்பட்டிருக்கிறது. ஒரே இரவில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த தர்க்கா பீர்ஸ்தான் என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட மன்னரின் ஆட்சியின்போது இந்த இடத்தை ஒரு கெட்ட ஆவி ஆக்கிரமித்துக்கொண்டு அனைவரையும் மிரட்டி வந்ததாகவும், இந்த ஹஸ்ரத் ஷா கமல் பாபா அந்த ஆவியை தனது சக்தியால் விரட்டி அடித்ததாகவும் கதைகள் கூறப்படுகின்றன.

உருஸ் எனும் திருவிழா இந்த தர்க்கா ஸ்தலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்திய வங்காள பிரிவினைக்கு முன்பிருந்தே இந்த திருவிழா கொண்டாட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. பீர் பாபாவின் ஆசிகளை பெறுவதற்காக வெகு தூரத்திலிருந்தும் பக்தர்கள் இந்த தர்க்காவுக்கு வருகை தருகின்றனர்.

அமைதியான ஒரு இடத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த தர்க்கா முகலாய பாணி கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. மேகாலய மாநில வக்ஃப் வாரியம் இந்த தர்க்காவை 2008-2009ம் ஆண்டுகளில் புதுப்பித்துள்ளது.

அமைதியையும் மனச்சாந்தியையும் விரும்பும் ஆன்மிக ஆர்வலர்கள் இந்த பீர்ஸ்தான் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu