Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேற்கு கரோ ஹில்ஸ் » ஈர்க்கும் இடங்கள் » மீர் ஜும்லா கல்லறை

மீர் ஜும்லா கல்லறை, மேற்கு கரோ ஹில்ஸ்

33

மேற்கு கரோ மலை மாவட்டத்தில் மன்சச்சார் நகரத்துக்கு அருகே ரங்கபணி எனும் இடத்தில் இந்த மீர் ஜும்லா கல்லறை அமைந்துள்ளது. ஒரு சிறிய மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ள இந்த கல்லறை முஸ்லிம் நலச்சங்கங்கள் மூலம் நூற்றாண்டு காலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கல்லறை வளாகத்தில் உள்ள மீர் ஜும்லா சமாதி மிக நீளமாக காணப்படுகிறது.

இந்த மீர் ஜும்லா ஔரங்கசீப் மன்னரின் படைத்தளபதியாக இருந்தவராவார். இவரை ஔரங்கசீப் மன்னர் வங்காள தேசத்துக்கான ஆளுநராக நியமித்தபின்னர், மீர் ஜும்லா ஒரு பெரும் படைக்கு தலைமை வகித்து அஸ்ஸாம் பகுதியை வெல்வதற்கு சென்றார்.

அஸ்ஸாமை ஆண்டுவந்த மன்னர்கள் முகலாய ராஜ்ஜியத்தின் வங்காள தேசத்து பகுதிகளை கைப்பற்றியிருந்தனர். எனவே மீர் ஜும்லா அந்த பகுதிகளை மீட்கும் நோக்கத்துடன் படையெடுப்பை மேற்கொண்டார்.

துவக்கத்தில் அவரது முயற்சியில் சிறிதளவு வெற்றியை அடைந்தாலும் அனுபவம் அற்ற சிக்கலான நிலப்பகுதி, மலேரியா பரவியிருந்த சூழல் போன்றவற்றால் மீர் ஜும்லா அஸ்ஸாம் பகுதிகளை முழுக்க கைப்பற்ற முடியாமல் தன் படையுடன் பின் வாங்க நேரிட்டது.

இருப்பினும் வங்காளத்துக்கும் திரும்ப முடியாமல் வழியில் மலேரியா நோயால் தாக்கப்பட்டு இவர் இறந்தார். துரா நகரத்திலிருந்து 40 கி.மி தூரத்தில் ரங்கபணி எனும் இடத்தில் இந்த மீர் ஜும்லா கல்லறை அமைந்துள்ளது. துரா நகரத்திலிருந்து சுற்றுலா வாகனங்கள் மூலம் இந்த ரங்கபணிக்கு வரலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Jul,Fri
Return On
25 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Jul,Fri
Check Out
25 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Jul,Fri
Return On
25 Jul,Sat