Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வோக்கா » ஈர்க்கும் இடங்கள் » வான்கோசங்

வான்கோசங், வோக்கா

14

நீங்கள் வோக்காவில் கிறித்துவத்தின் விதைகளைக் கண்ணுற விரும்பினால், வோக்கா நகரத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வான்கோசங்கிற்குச் செல்ல வேண்டும்.

இது, வோக்கா நகரின் வடக்குப்புறத்தில் புராணச் சிறப்பு வாய்ந்த தியி சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் க்யோன் பாப்டிஸ்ட் எக்கும்கோ சன்ரியூட்ஸூயின் (கேபிஇஎஸ்) மிஷன் வளாகத்தைக் காண நேரிடலாம்.

முதல் அமெரிக்க பாப்டிஸ்ட் சமயப்பணி, இதே இடத்தில் 1923 ஆம் வருடம் தொடங்கப்பட்டிருக்கிறது; அதனால் இந்த இடம் வோக்காவின் கிறித்துவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.             

க்யோன் பாப்டிஸ்ட் எக்கும்கோ சன்ரியூட்ஸூ, வான்கோசங்கில் பல்வேறு கல்வி மற்றும் உடல்நல சேவைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் இங்கு ஒரு கல்லூரி நிறுவும் வேலைகளிலும் துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

வான்கோசங், சுற்றிலும் மலைச்சிகரங்கள், பள்ளத்தாக்குகள் மற்றும் பசுமை நிறைந்து எழில் கொஞ்சும் காட்சிகளை நம் கண்களுக்கு விருந்தாக்குகிறது.

இங்கு சென்று வருவதன் மூலம் இங்கு வாழும் மக்களோடு கலந்துரையாடி, அவர் தம் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் பற்றி அவர்களிடமிருந்தே அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பினைப் பெறலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed