யானா கிராமத்துக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய புனித ஸ்தலம், குகைக் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படும் பைரவேஸ்வரா கோயில். இது பைரவேஸ்வரா ஷிக்கராவின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது.
இங்கு உள்ள தான்தோன்றி லிங்கம் வேண்டும் வரங்களை கொடுக்க வல்லது என்று நம்பப்படுகிறது. இந்த லிங்கத்தின் மீது பாறைகளிலிருந்து வழியும் நீர் இடைவிடாது சொட்டிக்கொண்டிருப்பதால் இதற்கு கங்கோத்பவா என்ற சிறப்புப் பெயரும் உண்டு.அதோடு துர்கா தேவியின் வெங்கல சிலை ஒன்றும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் பத்து நாட்கள் நடக்கும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கில் புனித யாத்ரிகர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது நடன நிகழ்ச்சிகள், யக்ஷகானா போன்ற நாட்டுபுற கலை நிகழ்சிகள் ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும்.
இச்சமயங்களில் கோயிலுக்குள் செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் பைரவேஸ்வரா ஷிக்கரா முழுமையும் வெறும் கால்களுடன்தான் நடந்துசெல்ல வேண்டும். இதற்கு பின் கோயிலிலிருந்து வெளிவந்த உடனே பயணிகள் மோகினி ஷிக்காராவுக்கு செல்லும் படிகளை அடைவார்கள்.



Click it and Unblock the Notifications