எல்லாபூர் செல்லும் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு இடம் மகோட் கிராமத்திற்கு அருகில், எல்லாபூரிலிருந்து 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் மகோட் நீர்வீழ்ச்சி.
பெட்தி ஆறு 650 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளை கடந்து ஓடி வருகையில் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது ஜேனுகல்லுகுட்டா மற்றும் சன்செட் பாயின்டிற்கு அருகிலேயே இருப்பதால், பயணிகளுக்கு இதை சென்றடைவதில் சிரமம் குறைவு.
மேலும் மகோட் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் காவடி கரே எனும் அழகான ஏரியும் பசுமையான காட்டின் நடுவில் அமைந்துள்ளது. மழைக்காலம் முடிந்தபின்னரும் மற்றும் குளிர்கால துவக்கத்திலும் இந்த இடம் சுற்றிப்பார்க்க உகந்தது.



Click it and Unblock the Notifications