Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» தடியாண்டமோல்

தடியாண்டமோல் – கர்நாடகாவின் மூன்றாவது உயரமான சிகரம்

11

தடியாண்டமோல் கர்நாடக மாநிலத்தின் மூன்றாவது உயரமான மலைச்சிகரமாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைஸ்தலம் கூர்க் மாவட்டத்திலுள்ள கக்கபே நகரத்துக்கு அருகில் உள்ளது. கேரள கர்நாடக எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 1748 மீட்டர் உயரத்தில் இந்த மலைஸ்தலம் அமைந்துள்ளது. மலை ஏறிகளுக்கும் மற்றும் மலைப்பயணத்தை விரும்புகின்றவர்களுக்கும் சவாலான மலைஸ்தலமாக இது அமைந்துள்ளது.

 

இந்த மலைஸ்தலத்தின் விசேஷம்

தடியாண்டமோல் எனும் இந்த பெயர் மலையாள மொழியிலிருந்து பிறந்துள்ள ஒரு சொல்லாகும். இதற்கு பெரிய மலை என்ற அர்த்தத்தை கொள்ளலாம். கடினமான மலையேற்றத்துக்கு தயக்கம் காட்டும் பயணிகள் பாதி தூரம் வரை வாகனத்தில் பயணிக்கலாம்.

இருப்பினும் மீத தூரத்தை மலையேற்றம் மூலமாக கடக்க வேண்டியிருக்கும். உச்சியில் ஏறியபின் காணக்கிடைக்கும் காட்சி எல்லா சிரமங்களையும் மறக்க வைத்து விடும் என்பது உண்மை.

மலையடிவாரத்தில் உள்ள நலக்நாட் அரண்மனை ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட அம்சமாகும். இது தொட்ட வீரராஜேந்திராவால் 1792ம் ஆண்டில் தன் படையினர் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ளது.

சிகரத்தை அடைவதற்கு சில கிலோ மீட்டருக்கு முன்பாக பயணிகள் பாடி இக்குதப்பா எனும் கோயிலில் ஓய்வெடுக்கலாம். இது உள்ளூர்வாசிகளால் புனிதமான கோயிலாக கருதப்படுகிறது. இந்த சிகரத்தின் சரிவில் உள்ள சோலைக்காடுகள் இயற்கைச் செழிப்புடன் கண்களுக்கு விருந்தாய் காட்சியளிக்கின்றன.

தடியண்டமோல் மலைஸ்தலத்தை கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்து சுலபமாக சென்றடையலாம். 321 கி.மீ தூரத்தில் உள்ள பெங்களூர் விமான நிலையம் அருகாமை விமான நிலையமாக அறியப்படுகிறது. அதேபோல 263 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்களூர் ரயில் நிலையமே தடியாண்டமோலின் அருகாமை ரயில் நிலையமாகும். பெங்களூரிலிருந்து 5 மணி நேர பயணத்தில் செல்லும்படி டாக்ஸிகளும் கிடைக்கின்றன.

தடியாண்டமோல் சிறப்பு

தடியாண்டமோல் வானிலை

சிறந்த காலநிலை தடியாண்டமோல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தடியாண்டமோல்

  • சாலை வழியாக
    தடியாண்டமோல் ஸ்தலத்துக்கு அரசு போக்குவரத்து நிறுவனமான KSRTC மற்றும் தனியார் பேருந்துகள் பெங்களூர் மற்றும் அருகாமை நகரங்களிலிருந்து தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மங்களூர் ரயில் நிலையம் தடியாண்டமோல் அருகிலுள்ள ரயில் நிலையமாகும். இது இங்கிருந்து 131 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து பல இந்திய பெரு நகரங்களுக்கு நிறைய ரயில் வசதிகள் உள்ளது. மங்களூர் ரயில் நிலையத்திலிருந்து தடியண்டமோல்’க்கு டாக்சி வசதிகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    தடியாண்டமோல் மலைஸ்தலத்துக்கு அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் 139 கி.மீட்டர் தூரத்திலும், பெங்களூர் விமான நிலையம் 250 கி.மீட்டர் தூரத்திலும் உள்ளது. பெங்களூர் விமான நிலையம் மத்திய கிழக்கு, ஐரோப்பிய, அமெரிக்க, கிழக்காசிய இந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை பெற்றுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Fri
Check Out
27 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat