Share This Story
 
முகப்பு » கர்நாடகா » மங்களூர் » கண்ணோட்டம்

மங்களூர் – கர்நாடகத்தின் நுழைவாயில்

கர்நாடகத்தின் நுழைவாயில் என்று  அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது. மங்களாதேவி தெய்வத்தின் பெயரில் அமைந்திருக்கும் இந்த மங்களூர் நகரம் பல காலமாக ஓய்வில்லாத ஒரு துறைமுக நகரமாகவே விளங்கி வந்திருக்கிறது. இந்த துறைமுக நகரத்தினை பற்றிய வரலாற்று குறிப்புகள் 14 ம் நூற்றாண்டிலிருந்து நமக்குக் காண கிடைக்கின்றன. மங்களூர் அரசர்கள் மற்ற பாரசீக வளைகுடா நாடுகளோடு வணிக தொடர்பு துவங்கியதிலிருந்து இந்த குறிப்புகள் பதியப்பட்டுள்ளன.

மங்களூர் புகைப்படங்கள் - சூரிய அஸ்த்தமண காட்சி

புவியியல் ரீதியாக முக்கிய இடத்தில் இருப்பதால் மங்களூர் நகரம் பல ஆட்சியாளர்களிடம் மாறி மாறி இருந்து வந்துள்ளது. இந்த நகரத்தை கைப்பற்ற போர்த்துக்கீசியர்களும், ஆங்கியலேயரும் மைசூர் மன்னர்களான திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலியுடன் பல கடுமையான போர்களை நட்த்தியுள்ளனர்.

வெவ்வேறு அரச வம்சங்களால் மாறி மாறி ஆளப்பட்டதால் கல்வையான ஒரு பண்பாட்டு அம்சங்களை இந்நகரம் தன்னுள் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க  காபி மற்றும் முந்திரி ஏற்றுமதியில் இந்த நகரம் இன்றும் முன்னணியில் இருப்பதால் சிறப்பு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

இயற்கை ரசிகர்களின் சொர்க்கம்

மங்களூரின் ஒப்பிட முடியாத இயற்கை வனப்பு ஒரு விசேஷ கீர்த்தியை அதற்கு தந்திருக்கிறது. நேத்ரவதி மற்றும் குர்புரா என்ற இரு ஆறுகளின் முகத்துவார நீர்த்தேக்கங்களை ஒட்டி 132.45 சதுர கி.மீ பரப்பளவுக்கு மங்களூர் நகரம் அமைந்திருக்கிறது.

அரபிக் கடலின் மாசற்ற பொன் நிற கடற்கரைகள் காற்றில் அசையும் பனை மரங்களோடு இங்கு காட்சியளிக்கிறது. அவற்றுக்கு பின்னே பசுமையான் மலைகளும் சிவப்பு ஓடுகள் வேயப்பட்ட பாரம்பரிய வீடுகளும் அழகுற காட்சியளிக்கின்றன. சுமார் 6 லட்சம் மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

சம்பிரதாயங்களும் பண்பாடும் பல்விதமான கலவையான மொழிப் பின்னணியையும் வம்சா வளியினரையும் கொண்டிருப்பது மங்களூரின் அடையாளமாகும். தவிர பல்வித மதங்களையும் ஒருசேர கொன்டிருக்கும் மங்களூரில் துளு, கொங்கணி, பேரி மற்றும் கன்னடா போன்ற நான்கு முக்கிய மொழிகள் பேசப்படுகின்றன. ஆகவே மங்களூர் எல்லா பண்பாடுகள் சம்பிரதாயங்கள் உணவு முறைகள்  மற்றும் நாகரிகங்கள் கலந்த ஒரு கலவையான சுவாரசிய நகரமாக மிளிர்கிறது.

இந்த நகரில் குறிப்பிட த்தக்க கலையம்ச விசேஷங்களாக யக்‌ஷகானம், கிருஷ்ண ஜன்மாஷ்டமி, கரடி வேஷ நடனம் போன்ற வற்றை குறிப்பிடலாம். தசரா கொண்டாட்டங்களின் போது மங்களூர் ராஜ களை பூணுவதால் இதை கண்டு களிக்க வெளி நாடுகள் பலவற்றிலிருந்து ரசிகர்கள் வருகின்றனர்.

பார்க்கவும் அனுபவிக்கவும் அம்சங்கள் ஏராளம்

இயற்கை அழகு மட்டுமல்லாது பாரம்பரிய ஸ்தலங்கள் என்று ஏராளம் ஒரு சுற்றுலா பயணிக்காக மங்களூர் வாரி வழங்குகிறது. இங்குள்ள மங்களாதேவி கோயிலை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இது தவிர பழமையான மங்களூரின் அடையாளமாக திகழும் இடங்களாக கதரி மஞ்சுநாதர் கோயில், செயிண்ட் அலோசியஸ் பீடம், ரொஸாரியோ தேவாலயம் மற்றும் ஜமா மஸ்ஜித் போன்றவை விளங்குகின்றன. தங்க நிற கடற்கரையை சூரிய வெளிச்சத்தையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு சோமேஸ்வரா கடற்கரை மற்றும் தன்னீர்பாவி கடற்கரை போன்றவை உள்ளன.

மங்களூர் நகரமானது தன்னுடைய இயற்கையான புவியமைப்பு மற்றும் வனப்பு காரணமாக பன்னெடுங்காலமாகவே பயணிகளை ஈர்த்து வந்துள்ளதுடன் அது இன்றும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Click here to type in tamil

அருகில் பயணம்

வரலாற்று சிறப்பு வாய்ந்த கர்கலா நகரம் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமாகும். கர்கலா நகரத்தின் வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்கும் போது, ஜைன மன்னர்களின் ஆட்சி காலமான 10-ஆம் நூற்றாண்டை பொற்காலம் என்றே சொல்லலாம். இந்தக் காலங்களில் தான் எண்ணற்ற
கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி இங்குள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் இதன் உணவுச்சுவைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. உடுப்பி என்ற பெயரைக் கேட்டாலே நாவில் ஊறும் அளவுக்கு மத்வா இனத்தவரின் தென்னிந்திய பாணி உணவுத்தயாரிப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவர்கள் காலங்காலமாக தெய்வப்பிரசாதங்களை தயாரிக்கும் பணியில்
கோயில் நகரமான உடுப்பியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு அழகிய கடற்கரை நகரம் இந்த மால்பே ஆகும். இது கர்நாடகக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகம் மற்றும் முக்கியமான மீன்பிடி நகரம் ஆகும். உதயவரா ஆற்றின் முகத்துவார (உப்பங்கழி) பகுதியில்
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குதுரேமுக் ஒரு புகழ்பெற்ற மலைவாசஸ்தலமாகும். இது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது.  மடிப்பு மடிப்பாக  பசும்புல்வெளிப் பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளுமாக காட்சியளிக்கும் இப்பிரதேசம் ஒரு ‘உயிரியல் பன்முகத்தன்மை’ கொண்ட ஸ்தலமாக அறியப்படுகிறது.   அலையலையாய் பசுமைப் பள்ளத்தாக்குகள்குதுரேமுக் தேசியப்பூங்காவானது