கேரளாவில் உள்ள தொன்மையான கிருஷ்ணர் கோயில்களில் ஒன்றான பார்த்தசாரதி கோயில், அடூர் வரும் புனித யாத்ரிகர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. இந்தக் கோயில் கிருஷ்ண பகவானின் அவதாரமாக கருதப்படும் பார்த்தசாரதி சுவாமிக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அதோடு இந்தக் கோயிலில் விநாயகர் மற்றும் சிவபெருமானையும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
பார்த்தசாரதி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் திருவிழாவில் கேரளா முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக யானைகளை கொண்டு நடத்தப்படும் கஜமேளா என்ற நிகழ்ச்சி பக்தர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் வெகுப்பிரபலம். அப்போது 9 யானைகள் ஆடைகள் அணிவிக்கப்பட்டு, கோயில் முன்பிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் காட்சி மிகவும் அற்புதமானது.
மேலும் கிருஷ்ண பகவானின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் அஷ்டமி ரோகினி என்ற விழாவும் இங்கு நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் நீங்கள் அடூர் சுற்றுலா வரும் பட்சத்தில் பரிஜாமுட்டுகலி, மயூர நிருத்தம், அம்மன்குடம், வேலகலி போன்ற நாட்டுப்புற கலை மற்றும் நடனங்களை பார்த்து ரசிக்கும் அறிய வாய்ப்பை பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications