அடூர் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் செயின்ட் மேரிஸ் ஆர்தோடக்ஸ் சிரியன் கத்தீட்ரல் மிகவும் பிரசித்திபெற்ற தொன்மை வாய்ந்த புனித ஸ்தலமாகும்.
இந்த தேவாலயம் தும்பமன் எனும் கிராமத்தில் அமைந்திருப்பதால் தும்பமன் வலியபள்ளி என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. இப்பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் நஜரீன் கிறிஸ்தவர்கள் என்ற பிரிவை சேர்ந்தவர்களின் பிரதான வழிபாட்டு மையமாக இந்த தேவாலயம் விளங்கி வருகிறது.
செயின்ட் மேரிஸ் ஆர்தோடக்ஸ் சிரியன் கத்தீட்ரல் தேவாலயம் 717-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்துக்கு ஜெருசலேம் நகரிலிருந்து திரும்பி வந்த பிறகு பருமளா கொச்சு திருமேனி 'லிட்டில் ஜெருசலேம் தேவாலயம்' என்று பெயரிட்டார்.
மேலும் கேரளாவின் தொன்மையான தேவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இந்த தேவாலயம் இப்பகுதியின் வரலாறு மற்றும் கலாச்சாரத்துக்கு சிறந்த உதாரணமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications