அகர்தலா நகரத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் இந்த கமால்சாகர் எனும் ரம்மியமான ஏரி அமைந்திருக்கிறது. இது இந்திய-பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் உள்ளது.
வழங்கி வரும் கதைகளின்படி இந்த ஏரி 15ம் நூற்றாண்டில் மஹாராஜா தன்யா மாணிக்யா என்பவரால் வெட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அகர்தலா நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் இந்த ஏரி வீற்றிருக்கிறது.
இந்த ஏரியின் கரைப்பகுதியில் புகழ் பெற்ற காளி மந்திர் கோயில் அமைந்துள்ளது. 16ம் நூற்றாண்டிலிருந்து இந்த கோயில் ஆகியவை ஒரு பிரசித்தமான வழிபாட்டுஸ்தலமாக விளங்கி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மிக பழமையான துர்க்கை சிலை 12ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஏரியை சுற்றிலும் இயற்கைக்காட்சிகள் நிரம்பி வழிவதால் இந்த ஸ்தலம் ஒரு பிக்னிக் சிற்றுலாத்தலமாகவும் புகழ் பெற்றுள்ளது. வருடம் முழுதும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இந்த ஏரிக்கு விஜயம் செய்த வண்ணம் உள்ளனர்.
அக்டோபர் மாதத்தில் நவராத்திரி திருநாளில் இங்குள்ள காளி கோயிலில் திருவிழா நிகழ்ச்சி விசேஷமாக கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications