உமாமஹேஷ்வர் கோயில், அகர்தலா

உமாமஹேஷ்வர் கோயிலானது உஜ்ஜயந்தா அரண்மனை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கிறாது.  அரண்மனை வளாகத்திலேயே அமைந்துள்ள பல கோயில்களில் இதுவும் ஒன்று.

ஹிந்து கோயிலான இது சிவ-சக்தி வழிபாட்டு மரபு இப்பகுதியில் விளங்கி வந்ததற்கான சான்றாக வீற்றிருக்கிறது. உமாமஹேஷ்வர் என்பது துர்க்கையின் மற்றொரு பெயர்.

செஞ்சிவப்பு நிறத்தில் வண்ணமடிக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் திரிபுராவில் உள்ள ஏனைய கோயில்களைப்போலவே வங்காள பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. வங்காளப்பிரதேசத்தில் உள்ள கோயில்கள் யாவும் செஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பது ஒரு  பொதுவான அம்சமாகும்.

இந்த உமாமஹேஷ்வர் கோயிலின் வடிவமைப்பை கவனிக்கும்போது வடகிழக்கிந்தியாவில் இம்மாநிலத்தில் மட்டும் ஹிந்து மரபு பின்பற்றப்பட்டு வந்திருப்பது புலனாகிறது.

இந்த கோயிலின் பின்புலத்தில் வீற்றுள்ள உஜ்ஜயந்தா அரண்மனை அகர்தலாவின் பிரபலமான சுற்றுலா அம்சமாகும். தூரத்திலிருந்து பார்க்கும்போது இந்த அரண்மனையின் தோற்றம் ஒட்டுமொத்த நகருக்கும் ஒரு சொர்க்கபுரி போன்ற அழகை அளிப்பதை நாம் உணரலாம்.

கோயில் மற்றும் அரண்மனை இரண்டுமே தமது தோற்றங்களில் ஒத்திசைந்த சீர்மையுடன் காட்சியளிப்பது மற்றொரு விசேஷம்.  கோயிலின் முன்பகுதியில் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் புல்தரைகளும் குறிப்பிடவேண்டிய ஒரு அம்சமாகும்.

Please Wait while comments are loading...