ஜகந்நாத் கோயில், அகர்தலா

மாணிக்யா ராஜவம்சத்தின் தலைநகரமாக அகர்தலா மாறியபிறகு அவர்கள் இந்நகரத்தை அழகுபடுத்தும் முயற்சிகளில் வெகுவாக தங்கள் முயற்சிகளை செலவிட்டனர். அவற்றில் ஒன்றுதான் திக்கி ஏரியின் கரையில் அமைந்துள்ள இந்த அழகிய ஜகந்நாத் கோயில்.

இந்த கோயிலில் உள்ள ஜகந்நாத் சிலை அல்லது நீல்மாதவ் சிலையானது பிரசித்தமான பூரி ஜகந்நாதர் கோயிலிலிருந்து கொடையாக வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தற்போது ஒரு தேசிய பாரம்பரிய சின்னமாக புகழ் பெற்றிருக்கும் இந்த கோயில் தனது வடிவமைப்பில் இஸ்லாமிய பாணி கட்டிடக்கலை அம்சங்களை அதிகமாக பெற்றிருக்கிறது.

குமிழ் மாடக்கோபுரங்கள் மற்றும் விதான வளைவு வாசற்கூரைகள் போன்றவை இக்கோயிலின் தனித்தன்மையான அம்சங்களாக காட்சியளிக்கின்றன. செஞ்சிவப்பு நிறத்தில் நான்கு அடுக்குகளை கொண்டுள்ள ‘ஷிகரா’ பாணி கோபுரம் ஒரு எண்முக வடிவ பீடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது.

ஹேமபந்தினி மற்றும் அராபிய கட்டிடக்கலை பாணிகளின் கலவையாக உருவாகியிருக்கும் இந்த கோயிலின் வடிவமைப்பு பார்த்து பார்த்து ரசிக்க வைக்கும் தனித்தன்மையான அழகை கொண்டிருக்கிறது.

கோயிலின் உட்புறத்தில் எல்லா ஹிந்து கோயில்களைபோன்றே தூண்கள் மற்றும் கிருஷ்ணர் வரலாற்றை கூறும் சித்தரிப்புகள் ஆகியவை காணப்படுகின்றன.

Please Wait while comments are loading...