Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அகர்தலா » ஈர்க்கும் இடங்கள் » கிருஷ்ண மந்திர்

கிருஷ்ண மந்திர், அகர்தலா

37

அகர்தலா நகரத்தின் மையப்பகுதியில் இந்த கிருஷ்ண மந்திர் கோயில் அமைந்துள்ளது. உஜ்ஜயந்தா அரண்மனையின் பிரதான வாசலுக்கு அருகே கட்டப்பட்டுள்ள இக்கோயில் மஹாராஜா பிரேந்திர கிஷோர் மாணிக்யா என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

அகர்தலா நகரத்தில் உள்ள முக்கியமான வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. தீவிர கிருஷ்ண பக்தரான அந்த மன்னர் அரண்மனையை சுற்றிலும் எழுப்பப்பட்டுள்ள மற்ற கோயில்களுடன்  இந்த கிருஷ்ணர் கோயிலையும் உருவாக்கியுள்ளார். 

கிருஷ்ணர் மற்றும் கீதையோடு நெருங்கிய தொடர்புடைய தாமல் மரங்களையும் இந்த கோயிலுக்கு அருகில் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். புராதனம் மற்றும் நவீன இரண்டும் கலந்த கட்டிடக்கலை அம்சங்களோடு இந்த கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.

திரிபுரா அரசர்களின் கலையார்வம் மற்றும் பக்தி போன்றவற்றை பிரதிபலிக்கும் காலச்சான்றாக இந்த கோயில் வீற்றிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 May,Sun
Check Out
01 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon