திரிபுரா மாநிலம் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. பிரம்பு பொருட்கள் தயாரிப்பிலும் இம்மாநிலம் முன்னிலை வகிக்கிறது.
திரிபுரா கைவினைப்பொருள் மற்றும் கைத்தறி வளர்ச்சி நிறுவனம் (THHDC) இந்த தயாரிப்புகளின் விற்பனை கேந்திரமாக செயல்பட்டு வருகிறது. புர்பாஸா என்றும் அழைக்கப்படும் இந்த THHDC மாநிலமெங்கும் தயாராகி வரும் கலைப்பொருட்களின் விற்பனைக்காட்சிக்கூடமாக இயங்குகிறது.
ஹிந்து, பௌத்த மற்றும் இஸ்லாமிய மரபுகளை பின்னணியில் கொண்டுள்ள திரிபுரா மாநிலத்தில் உருவாகும் பிரம்பு பொருட்கள் தனித்தன்மையான கலை நுணுக்கங்களை கொண்டதாக காணப்படுகின்றன.
10000 கைவினைத்தொழில் கலைஞர்களிடமிருந்து தருவிக்கப்படும் 200 வகையான கைவினைப்பொருட்களை இந்த THHDC நிறுவனம் சந்தைப்படுத்துகிறது.
இங்கு காணப்படும் மூங்கில் மற்றும் பிரம்பு பொருளால் ஆன கூரை அலங்கார அமைப்புகள், தொட்டி தாங்கிகள், சட்டகங்கள், தடுப்பு அமைப்புகள் போன்றவை திரிபுரா கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான தனிச்சிறப்பான படைப்புகளாகும்.
புர்பாஸா காட்சிக்கூடத்திற்கு ஒரு விஜயம் செய்தால் திரிபுராவின் கைவினைப்படைப்புகள் குறித்த நல்லதொரு அறிமுகம் கிட்டும்.