சுகந்தா அகாடமி, அகர்தலா

அகர்தலா நகரத்தின்  மையப்பகுதியில் அமைந்துள்ள சுகந்தா அகாடமி ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். 1997ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கல்வி மையம் மாநில அறிவியல் மையமாக அகர்தலாவில் இயங்குகிறது.

அறிவியல் தத்துவங்களை பொழுதுபோக்கு அம்சங்களோடு கலந்து போதிக்கும் வகையில் இங்கு பல காட்சி அமைப்புகளும் உபகரணங்களும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

இங்குள்ள பிளானட்டேரியம் எனும் கோளரங்கம் இதன் முக்கியமான அம்சமாக அறியப்படுகிறது. அளவில் சிறியதான இந்த கோளரங்கத்தில் தினசரி மாணவர்களுக்கான அறிவியல் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

அரைக்கோள வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோளரங்கம் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தத்துவங்கள் குறித்த சுவாரசியமான அறிமுகத்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அளித்து வருகிறது.

இந்த சுகந்தா அகாடமி அல்லது அறிவியல் மையத்தில் பெட் கார்னர், எனர்ஜி பார்க், ஃபன் சைன்ஸ் காலரி, புத்தக விற்பனைக்கூடம், பாபுலர் சைன்ஸ் காலரி, ரயில்வே காலரி, அக்வாரியம், ISRO காலரி போன்ற பல தனித்தனி பிரிவுகளும் இதர அங்கங்களும் உள்ளன.

இவை தவிர சைன்ஸ் பார்க் எனும் தனி வளாகத்தையும் இந்த மையம் கொண்டிருக்கிறது. இந்த சைன்ஸ் பார்க் எனும் அறிவியல் பூங்காவிற்கு தினசரி அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்கின்றனர்.  

Please Wait while comments are loading...