ஆட்டோ வேர்ல்டு எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் பலவிதமான கார்களின் சேகரிப்புகளை பார்த்து ரசிக்கலாம். அஹமதாபாத் நகரத்தில் கத்வாடா தஸ்தன் எஸ்டேட் எனும் இடத்திலுள்ள இது பிரண்லால் போகிலால் என்பவருக்கு சொந்தமானதாகும். 2200 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த பண்ணையில் 100 விலையுயர்ந்த விண்டேஜ் (பழமையான) கார்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
ரோல்ஸ் ராய்ஸ், டைம்லர், லங்கோண்டா, மெர்சிடிஸ், ஆபர்ன், கெடிலாக், ப்யூக், கிரைஸ்லர், பென்ட்லீ, கார்ட், லான்சியா, பேக்கார்ட், லிங்கன், மேபாக் போன்ற அதி ஆடம்பர சொகுசு கார்கள் இந்த சேகரிப்பில் இடம் பெற்றுள்ளன.
இவை யாவுமே உரிமையாளருக்காக வேண்டி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான கார்கள் கன்வெர்ட்டிபிள் வகையை (கூரை திறக்கும் அமைப்பு) சேர்ந்தவையாகும்.
ஒரே ஒரு குடும்பம் இத்தகைய கார்களை சேகரித்து வைத்திருக்கிறதென்றால் அதன் செல்வச்செழிப்பு, ரசனை, அதிகாரம் போன்றவற்றை யூகித்துக்கொள்ளலாம். இந்த வளாகத்தில் ஒரு காட்சி அரங்கு, கஃபேடேரியா, ஞாபகப்பொருள் விற்பனையகம் மற்றும் கார் சவாரிக்கூடம் ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications