Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஹமதாபாத் » ஈர்க்கும் இடங்கள் » காலிகோ மியூசியம் & சாராபாய் ஃபவுண்டேஷன்

காலிகோ மியூசியம் & சாராபாய் ஃபவுண்டேஷன், அஹமதாபாத்

105

காலிகோ மியூசியம் எனப்படும் அருங்காட்சியகம் இந்தியாவிலேயே இது போன்று முதன் முதலாக உருவாக்கப்பட்ட துணிவகை அருங்காட்சியகமாகும். இங்கு பலவகையான துணிவகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கொண்டு வரப்பட்ட, பல வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் காட்சியளிக்கும் துணி மாதிரிகளை இங்கு பார்க்கலாம்.

அது மட்டுமல்லாமல் இந்திய மண்ணிற்குரிய மிக நீண்ட நெசவு பாரம்பரியம் மற்றும் கைத்தறி நுட்பங்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பலவிதமான காட்சி அமைப்புகளும் இங்கு பார்வையாளர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கின்றன.

திரு கௌதம் சாராபாய் மற்றும் அவரது சகோதரியான கீரா சாராபாய் ஆகியோரால் காலிகோ ஹவுஸ் வளாகத்தில் 1949ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் பின்னர் 1983ம் ஆண்டில் தற்போது இது அமைந்துள்ள ஷாகிபாக் பகுதிக்கு மாற்றப்பட்டது.

ஸ்ரீமதி சரளாதேவி சாராபாய் மற்றும் ஸ்ரீ அம்பாலால் சாராபாய் ஆகியோரால் துவங்கப்பட்ட சாராபாய் ஃபவுண்டேஷன் ஒரு பொதுத்தொண்டு நிறுவனமாகும்.

அறிவியல், கலை மற்றும் இலக்கியம் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் இந்த மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. குஜராத்திய ஹவேலி பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்த மையத்தில் பலவிதமான கலைப்பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்திய கலைப்பாரம்பரியம் மற்றும் கலாசாரம் போன்றவை குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக அவ்வப்போது கருத்துப்பட்டறைகளையும் இந்த மையம் நடத்தி வருகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
15 Jun,Mon
Return On
16 Jun,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
15 Jun,Mon
Check Out
16 Jun,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
15 Jun,Mon
Return On
16 Jun,Tue