லோதால் எனும் இந்த தொல்லியல் ஸ்தலத்தில் ஹரப்பா நாகரிகத்தை சேர்ந்த ஒரு நகரத்தின் எச்சங்கள் காணப்படுகின்றன. லோதால் எனும் சொல்லுக்கு ‘மாண்டவர் மேடு’ என்பது பொருளாகும்.
ஒரு காலத்தில் இங்கு வீற்றிருந்த புராதன நகரத்தின் துல்லியமான வடிவமைப்பை இங்கு பார்க்க முடிகிறது. அக்காலத்திய கட்டிடக்கலை குறித்த தகவல்களை இங்குள்ள சிதிலங்களிலிருந்து நம்மால் யூகித்துக்கொள்ள முடிகிறது.
மேலும் இந்த ஸ்தலத்தில் கிடைத்திருக்கும் கைவினைப்பொருட்களிலிருந்து அக்கால மக்களின் கலாச்சாரம் குறித்த அறிவையும் பெற முடிகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் விளங்கிய இந்த லோதால் நகரம் தொடர்ந்த வெள்ளப்பெருக்கினால் அழிந்துபோயிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications