இந்த பிரசித்தமான நல்சரோவர் பறவைகள் சரணாலயம் மத்திய ஐரோப்பாவிலிருந்து உணவையும் வெப்பத்தையும் தேடி வரும் புலம் பெயர் பறவைகளை அதிகமாக கொண்டுள்ளது.
200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இந்த விருந்தினர்கள் பட்டியலில் அடங்குகின்றன. ஏரிப்பகுதி மற்றும் சுற்றியுள்ள சதுப்பு நில பகுதியில் புழுக்களையும் பூச்சிகளையும் தேடி உண்டபடி புலம்பெயர் பறவைகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.
நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்த ஏரியில் நீர் நிறைந்திருப்பதுடன் மீன்களும் அதிக அளவில் கிடைப்பது பறவைகளின் வருகையை அதிகமாக்குகிறது.
இந்த ஏரி மற்றும் சுற்றியுள்ள 120 ச.கி.மீ பரப்பரளவிலான சதுப்பு நிலப்பரப்பு ஆகியவை 1969ம் ஆண்டில் அதிகாரபூர்வமாக பறவைகள் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications