சர்தார் படேல் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த தேசிய அருங்காட்சியகம் ஷாகிபாக் பகுதியில் மோதி ஷாஹி மஹால் எனும் வரலாற்று மாளிகையின் உள்ளே அமைந்துள்ளது.
இந்த மாளிகை ஷாஜஹான் மன்னரால் 1622ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. 1960 முதல் 1978 வரை இது குஜராத் கவர்னர் வசிக்கும் ராஜ் பவன் மாளிகையாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
1980ம் ஆண்டு இந்த மாளிகை வளாகத்தின் தரைத்தளத்தில் சர்தார் வல்லபபாய் படேல் அவர்களுக்கான ஒரு நினைவு இல்லம் நிறுவப்பட்டது.
படேல் அவர்கள் நாட்டுக்காக அளித்திட்ட பல தொண்டுகளை விவரிக்கும் வண்ணம் இங்கு பல புகைப்படங்கள், செய்தித்தாள் துணுக்குகள், அரசியல் சித்திரங்கள், உருவப்படங்கள், நினைவுபொருட்கள் மற்றும் இதர பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த அருங்காட்சியகத்தின் வாசல் பகுதியில் சர்தார் படேல் அவர்களின் உருவச்சிலை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் தளம் ரவீந்திர நாத் தாகூரின் நினைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறையில் அவர் தனது 17வது வயதில் தங்கியிருந்துள்ளார். இங்கு தங்கிய அனுபவத்தின் பாதிப்பில் ‘தி ஹங்ரி ஸ்டோன்ஸ்’ (குடிதோ பஷான்) எனும் கதையை அவர் எழுதியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
தாகூரின் சிலை மற்றும் அவர் எழுதிய சில கடிதங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் போன்றவை இந்த அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications