Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஹமதாபாத் » ஈர்க்கும் இடங்கள் » ஷ்ரேயஸ் ஃபோக் மியூசியம்

ஷ்ரேயஸ் ஃபோக் மியூசியம், அஹமதாபாத்

105

ஷ்ரேயஸ் ஃபோக் மியூசியம் எனப்படும் இந்த நாட்டார் கலை அருங்காட்சியகம் நாட்டுப்புற கலைவடிவங்களை வெளிச்சப்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு குஜராத்திய பாணிகளை சேர்ந்த கைவினைக் கலைப்படைப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்ணாடி எம்பிராய்டரி வேலைப்பாடுகள், உலோகம் – மரம் – தோல் – துணி போன்றவற்றில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் மற்றும் உடைகள், பாத்திரங்கள், மிருக உருவங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவற்றை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.

இவற்றில் பெரும்பாலானவை குஜராத்திய பெண்களின் பாரம்பரியமான கலை நுணுக்கங்களில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு காட்சிப்பொருளுக்கும் அருகில் அவை சார்ந்த இதர புகைப்படங்கள் மற்றும் தகவல் குறிப்புகளையும் இங்கு பார்வையாளர்கள் காணலாம்.

இந்த அருங்காட்சியக வளாகத்தின் உள்ளேயே கல்பனா மங்கல்தாஸ் சில்ரன்’ஸ் மியூசியம் என்ற நிகழ்த்துகலை சார்ந்த அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் பொம்மலாட்ட பொம்மைகள், அவற்றுக்கான அலங்கார உடைகள், புராதன நாணயங்கள் மற்றும் நாட்டுப்புற இசை குறித்த சில ஆவணங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 3.19மீ உயரத்தில் காட்சியளிக்கும் ஒரு யானை எலும்புக்கூடு இங்குள்ள ஒரு முக்கியமான கவர்ச்சி அம்சமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
22 May,Fri
Return On
23 May,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
22 May,Fri
Check Out
23 May,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
22 May,Fri
Return On
23 May,Sat