துர்ட்லாங் எனப்படும் மலைப்பகுதி அய்சால் நகரத்தின் வடபகுதியில் அமைந்திருக்கிறது. பாறைப்பாங்கான மலைகள் தொடர்ச்சியாக இப்பகுதியில் வீற்றிருக்கின்றன.
இப்பகுதியில் மலையேற்றம் செய்வது அவ்வளவு சுலபமில்லை என்றாலும் உச்சிப்பகுதியிலிருந்து காணக்கிடைக்கும் எழிற்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. தூரத்தில் தெரியும் சிறுவீடுகள் மற்றும் சுற்றியுள்ள பசுமையான வனப்பகுதிகள் போன்ற காட்சிகள் ஓவியங்கள் போன்றே நம் கண் முன் விரிகின்றன.
இங்கு சில நாட்கள் தங்கி இயற்கையை ரசிக்க விரும்புபவர்களுக்காக அய்சால் நகரத்தில் பல தங்கும் விடுதிகளும் அமைந்திருக்கின்றன. ரிட்ஸ் ஹோட்டல், ராயல் ஹோட்டல், டிராபிகான ஹோட்டல், மயூர் ஹோட்டல் மற்றும் ஆர்க்கிட் ஹோட்டல் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. அய்சால் நகரத்திலிருந்து டாக்சிகள் மூலம் இந்த மலைப்பகுதியை வந்தடையலாம்.



Click it and Unblock the Notifications