அக்பர் அரண்மனை மற்றும் மியூசியம் 1570ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இது ராஜஸ்தானிலுள்ள வலிமையான சிறு கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது முகாலயப்பேரரசர் ஔரங்கசீப் மற்றும் ஆங்கிலேய தூதர் சர் தாமஸ் ரோ ஆகிய இருவரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட இடமாகவும் சொல்லப்படுகிறது.
அஜ்மீருக்கு விஜயம் செய்யும்போது பேரரசர் மற்றும் அவரது படையினர் தங்குமிடமாகவும் இது பயன்பட்டுள்ளது. 1908ம் ஆண்டு இது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
இதில் தற்போது 6ம் மற்றும் 7ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஹிந்து தெய்வச்சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் ராஜபுதன மற்றும் முகலாய கலை அம்சங்களைக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருப்பு பளிங்குக்கல்லால் ஆன ஒரு பிரம்மாண்டமான காளிதேவி சிலை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், புராதன யுத்தக்கருவிகள், வரலாற்றுக்கால வெடிமருந்து கருவிகள், சிற்பங்கள் மற்றும் கற்சிலைகள் ஆகியவற்றை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.



Click it and Unblock the Notifications