அக்பரி மஸ்ஜித் என்றழைக்கப்படும் இந்த மசூதி முகலாயப்பேரரசர் அக்பரால் 1571ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இது தர்க்கா ஷரீஃப் வளாகத்தில் ஷாஜஹானி வாசல் மற்றும் புலாந்த தர்வாஸாவுக்கு இடையில் அமைந்துள்ளது.
இந்த மசூதி சிவப்பு மணற்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இது மொய்னியா உஸ்மானியா தாருல் உலூம் எனும் அரபி மற்றும் பாரசீக மதக்கல்வி நிலையமாக செயல்படுகிறது.
பச்சை மற்றும் வெண் பளிங்குக்கற்கள் இந்த மசூதியின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாரிசு வேண்டுமென்று தர்க்கா ஷரீஃப் ஸ்தலத்தில் வேண்டிக்கொண்ட அக்பரின் வேண்டுதல் நிறைவேறியதால் நேர்த்திக்கடனாக இந்த மசூதியை அவர் கட்டியுள்ளார்.



Click it and Unblock the Notifications