Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஜ்மீர் » ஈர்க்கும் இடங்கள் » பரத்பூர் மியூசியம்

பரத்பூர் மியூசியம், அஜ்மீர்

33

பரத்பூர் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் லோஹாகர் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு சில அற்புதமான புராதன கலைப்பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் மியூசியம் அமைந்திருக்கும் இந்த மாளிகை அக்காலத்தில் ‘கச்சஹாரி கலான்’ என்ற பெயருடன் பரத்பூர் மன்னர்களின் நிர்வாகக்கூடமாக திகழ்ந்திருக்கிறது. பின்னாளில் 1944ம் ஆண்டு இது ஒரு மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது.

1ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரதிகள் இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய காட்சிப்பொருட்களாக கருதப்படுகின்றன. இங்குள்ள ஆர்ட் காலரியில் மைக்கா இலை, பீபால் மர இலை மற்றும் பழங்கால காகிதங்களில் தீட்டப்பட்ட பலவித குறு ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பரத்பூர் மஹாராஜாக்களின் பல ஓவியங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், 18ம் நூற்றாண்டைச்சேர்ந்த துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளையும் இங்கு பயணிகள் பார்க்கலாம்.

தொல்லியல், சிறுவர்களுக்கான காட்சிக்கூடம், யுத்தக்கருவிகள், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் வணிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு பிரிவுகளை இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30வரை இது திறந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun