துர்கா பாக் எனும் இந்த அழகிய தோட்டப்பூங்கா அஜ்மீரிலுள்ள 1868ம் ஆண்டு மஹாராஜா ஷிவ் தான் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். அணா சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ள இது அஜ்மீர் நகரின் மிகச்சிறந்த தோட்டப்பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த பசுமையான பூங்காவில் ஏராளமான பூச்செடிகள் மற்றும் தாவரங்கள் எழிலுடன் காட்சியளிக்கின்றன. பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட பளிங்கு மாடங்கள் இப்பூங்காவிற்கு இன்னும் அழகைத்தரும் வகையில் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications