மந்திர் ஷீ நிம்பார்க் பீடம் எனும் இந்த மடாலயம் கேஜார்லியைச்சேர்ந்த பட்டி வம்ச தளபதியான ஷீ ஷியாவ்ஜி மற்றும் கோபால் சிங் ஜி பட்டி ஆகியோரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
தந்திரிகா ஃபக்கிர் மஸ்திங் ஷா என்பவரது மூர்க்கத்தனமான வழிமுறைகளிடமிருந்து மக்களைக்காப்பாற்றுவதற்காக இந்த அமைப்பை அவர்கள் நிறுவியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது வைணவ கருத்துக்களை பரப்பும் கோயிலாகவும் திகழ்ந்திருக்கிறது.
கோயில் வாசலில் நுழையும்போதே பக்தர்கள் மூலவிக்கிரகத்தை தரிசிக்கும் வகையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. பிரதான வாசலை 7 படிக்கட்டுகளை ஏறி அடையலாம்.
இந்த பிரம்மாண்ட கோயில் 42 ஆயிரம் சதுர அடிபரப்பில் அலங்காரத்தூண்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் மண், சுண்ணாம்புக்கல் மற்றும் பளிங்குக்கற்கள் ஆகிய பொருட்கள் இதன் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
வைஷ்ணவப் பிரிவைச்சேர்ந்தவர்கள் மத்தியில் வேத சனாதன தர்ம கருத்துகளைப்பரப்பும் நோக்கத்துடனும் ராதாகிருஷ்ண பக்தி பாரம்பரியம் சார்ந்த ஆன்மீக உணர்வுகளை தூண்டும் நோக்கத்துடனும் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications