Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஜ்மீர் » ஈர்க்கும் இடங்கள் » மேயோ காலேஜ் மற்றும் மியூசியம்

மேயோ காலேஜ் மற்றும் மியூசியம், அஜ்மீர்

33

மேயோ காலேஜ் எனப்படும் இந்த கல்வி நிலையம் 1869 மற்றும் 1872ம் ஆண்டுகளில் இந்திய வைசிராயாக பதவி வகித்த 6ம் எர்ல் மேயோ என்பவரால் உருவாக்கப்பட்டதாகும்.

ராஜமாஹாணங்களின் இளவரசர்களுக்கு ஆங்கிலேய நாகரீக பாணியில் அமைந்த கல்வியை தர வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த கல்லூரி துவங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ராஜபுதன அரசபரம்பரையினருக்கான கல்வி ஸ்தாபனமாக ஆங்கிலேயர் இந்த கல்வி நிறுவனத்தை ஸ்தாபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்லூரியின் பிரதான கட்டிடம் மேஜர் மாண்ட் என்பவரால் இந்தோ சராசனிக் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டிடக்கலை பாணி அப்போதைய ஜெய்பூர் அரசு பொறியாளரான சர் சாமுவேல் ஸ்விண்டன் ஜேக்கப் என்பவரால் பிரபல்யப்படுத்தப்பட்டதாகும்.

மேயோ காலேஜ் கட்டிடம் வெள்ளைப்பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டு இந்தோ சராசனிக் கட்டிடக்கலை பாணிக்கான மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

இந்த கல்லூரி வளாகத்திலேயே இடம் பெற்றுள்ள ஜலவார் ஹவுஸ் எனும் கட்டிடத்தில் ஒரு அருங்காட்சியகமும் செயல்படுகிறது. இங்கு பல அரும்பொருட்களும், போர்க்கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கல்லூரிக்கான சீருடை அடையாளத்தை வடிவமைத்தவர் முன்னாள் லாகூர் கலைக்கல்லூரி முதல்வர் லாக்வுட் கிப்ளிங் என்பராவார். இவர் புகழ் பெற்ற ஆங்கிலக்கவிஞர் மற்றும் எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu