உத்திரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் தான் சிவ்ராஜ்பூர். இந்நகரத்தை ஆண்டு வந்த ராஜா சதி பிரசாத் என்பவர் தன்னுடைய அரசியின் நினைவாக கட்டிய அழகிய கோவிலுக்காக வரலாற்று சிறப்பு பெற்றுள்ள நகரமாக இது விளங்குகிறது.
சிறந்த கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலின் பெயர் தான் கேரேஸ்வர் கோவில் என்பதாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, நன்றாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் அழகாக செதுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகள் மற்றும் வடிவமைப்புகள் ஒரே நாளில் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன.
கங்கை நதிக்கரையில் கண்கவரும் காட்சியைத் தரும் வகையில் இந்த கோவில் அமையப்பெற்றுள்ளன. இந்த இடத்திற்கு அருகாமையில் வேறு சில கோவில்கள் மற்றும் கல்லூரிகளும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications