வளமான உயிர்-பன்முகதன்மையுடன் இருக்கும் அழகிய ஏரியாக ஷேக்கா ஏரி விளங்குகிறது. அலிகார் நகரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள இந்த ஏரி முதன்மையான நீர்ப்பாசன ஆதாரமாகவும் உள்ளது. மேலும், இந்த பகுதியில் தண்ணீருக்கான முக்கியமான ஆதாரமாகவும் ஷேக்கா ஏரி விளங்குகிறது.
இந்த ஏரியின் ஒரு புறத்தில் விஸ்தாரமான பண்ணை நிலப்பகுதிகளும், மற்றொரு பகுதியில், குளிர்காலங்களில் பல்வேறு வகையிலான இடம்பெயரும் பறவைகளின் வசிப்பிடமாகவும் விளங்கி வருகின்றன.
குளிர்காலங்களில் சில தாவரவியல் ஆய்வாளர்கள் அல்லது பறவைகளை கவனிப்பவர்கள் ஆகியோர் இங்கிருக்கும் மாறுபட்ட உயிரினங்களைக் காண்பதற்காக வருவது வழக்கம். மேலும், பார்வையாளர்களும் இங்கே குவிந்து கிடக்கும் ஏரியின் இயற்கையழகு மற்றும சுற்றுப்புறத்தை காண்பதற்காக வந்து செல்வார்கள்.



Click it and Unblock the Notifications