சர் சையது என்ற முஸ்லீம் மனிதர், கல்வி, சமூகம் மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளுக்காக மிகவும் மதிக்கப்படுபவராவார். அவர் தன்னுடைய தந்தையின் கல்வி நிலையத்திற்காக இந்த இடத்தை முதலில் வாங்கினார். உண்மையில் ஒரு இராணுவ உணவகமாக இருந்த சர் சையது அகாடமி கட்டிடம் பின்னர் நினைவகமாக மாற்றப்பட்டது.
இந்த கட்டிடத்திற்குள் இருக்கும் அருங்காட்சியகத்தில் சர் சையது அவர்களின் உடைமைகள் சில வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் பல்வேறு பிரிவுகள் அல்லது கேலரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலான பொருட்கள் சர் சையதுவின் வாழ்க்கை, கோட்பாடுகள் ஆகியவற்றை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், சில பகுதிகள் அவரால் உருவாக்கப்பட்ட மதிப்பு மிகுந்த அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றையும் எடுத்துச் சொல்வதாக இருக்கும்.
இந்த பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications