அலிகாரில் இஸ்லாமிய சமயத்தை சாராத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இருக்கும் தீர்த்தம் மாங்கல்யாதான் சமண மக்களின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைக்குரிய இடமாகும். உண்மையில், இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய சமண மத வழிபாட்டுத்தலமாக இது திகழ்ந்து வருகிறது.
சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் பிரார்த்தனை, பக்தி, சமூக சேவை, கல்வி மற்றும் ஆராய்ச்சி போன்ற சமுதாய-மத தத்துவங்களை போற்றி வளர்க்கும் இடமாக இந்த வளாகம் விளங்குகிறது.
இதன் காரணமாக, இந்த இடம் பிற பாரம்பரியமிக்க வழிபாட்டுத்தலங்களைப் போல இருக்காது. இந்த வளாகத்தின் மைதானத்தில் நான்கு முக்கிய கோவில்களும், மீதமுள்ள இடங்கள் ஆராய்ச்சி மற்றும் பிற காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அலிகார்-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள வழிபாட்டுத்தலமான தீர்த்தம் மாங்கல்யதானை அடைவது மிகவும் எளிதான விஷயமாகும்.



Click it and Unblock the Notifications