கேரளாவிலுள்ள ‘கத்தோலிக் சிரியன்’ தேவாலயங்களின் தாய் ஆலயமாக இந்த சம்பக்குளம் சர்ச் புகழ் பெற்றுள்ளது. கி.பி 427ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் காலப்போக்கில் பல மாற்றங்களையும் புனரமைப்புகளையும் சந்தித்துள்ளது.
இதன் செழுமையான வரலாற்றுப்பின்னணி குறித்த தகவல்களை இந்த ஸ்தலத்திலேயே காணப்படும் பாறைக்கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த குறிப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்த தேவாலயம் சந்தித்த சம்பவங்களை எடுத்துரைக்கின்றன. 1151ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாறை சிலுவையையும் இந்த தேவாலய ஸ்தலத்தில் பார்க்கலாம்.
மேலும், இங்கு ஒவ்வொரு வருடமும் மார்ச் 19ம் தேதி செயிண்ட் ஜோசப் பெயரில் ஒரு திருவிழாவும் நடத்தப்படுகிறது. இது தவிர அக்டோபர் மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் மற்றொரு வருடாந்திர திருவிழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது.
‘ஆலெப்பி நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள இந்த கிறித்துவ ஆன்மீக ஸ்தலத்துக்கு உப்பங்கழி படகுப்போக்குவரத்து மூலமாகவும் ஒரு மணிநேரத்தில் சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications