பாண்டவன் ராக் என்று அழைக்கப்படும் இந்த பாறை ஸ்தலமானது ஹிந்து புராண காவியமான மஹாபாரதத்தோடு தொடர்புடைய கதையை தன் பின்னணியில் கொண்டுள்ளது. அதாவது, பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தபோது இங்குள்ள குகையில் வசித்ததாக இப்பகுதியின் தலபுராணம் கூறுகிறது.
அந்தக்குகையானது காலப்போக்கில் ஒரு சிறு குன்றாக மாறிவிட்டதாகவும் நம்பப்படுகிறது. தற்போது இந்த இடம் மாலை நேரத்தை குடும்பத்துடன் பொழுதுபோக்குவதற்கான ஒரு எழில் நிறைந்த பிக்னிக் ஸ்தலமாக பயணிகளால் விரும்பப்படுகிறது. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர மற்றவர்கள் சுலபமாக ஏறி இந்த பாறைப்பகுதியை அடையலாம்.
பாறை உச்சியிலிருந்து சுற்றிலும் உள்ள இயற்கைக்காட்சிகளை நன்றாக ரசிக்க முடிவது இந்த இடத்தின் சிறப்பாகும். ஏறும் வழிப்பாதையிலும் பல காட்சி தளங்கள் அமைந்துள்ளன. ‘ஆலெப்பி நகர’த்திலிருந்து இந்த பாண்டவன் ராக் பாறைப்பகுதிக்கு செல்வதற்கு டாக்சி, ஆட்டோ மற்றும் பேருந்து வசதிகள் கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications