அல்வர் பகுதின் முக்கிய அம்சங்களுள் ஒன்றான இந்த ‘கம்பெனி பாக்’ என்றழைக்கப்படும் பூங்காத்தோட்டம் பலவகையான தாவரங்களையும், பசுமையான புல்வெளிகளையும் கொண்டுள்ளது.
விசாலமான முன்பகுதியையும் இது பெற்றுள்ளது. ராஜா ஷிவ் தான் சிங் என்பவரால் 1868ம் ஆண்டு இந்த பூங்காத்தோட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மணற்பாங்கான பிரதேசத்தின் நடுவே ஒரு பசுமை ஸ்தலமாக காணப்படுவதால் தார் பாலைவனத்தின் நடுவே ஒரு பாலைவனச்சோலை என்றும் இது சிறப்புடன் அடையாளப்படுத்தப்படுகிறது.
இதன் உள்ளே பெங்காலி பாணி கூரை வளைவுகளுடன் கூடிய ஒரு சாத்ரி மாடமும் இடம்பெற்றுள்ளது. ஷிம்லா ஹவுஸ் எனப்படும் மற்றொரு மாளிகையும் ஒரு மிகப்பெரிய அலங்காரத்தோரண வளைவுடன் இந்த கம்பெனி பாக் பூங்காவில் அமைந்துள்ளது. இது மஹாராஜா மங்கல் சிங் என்பவரால் 1885ம் ஆண்டு கோடை வசிப்பிடமாக கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications