அல்வர் நகரத்திலுள்ள இந்த கலாகந்த் மார்க்கெட் பகுதி ஷாப்பிங் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. பல ருசியான இனிப்பு பலகார வகைகளுக்கும் இது புகழ் பெற்றுள்ளது.
ஒவ்வொரு தின்பண்டத்துக்கும் ஒரு கடைத்தெரு பிரத்யேகமாக இருப்பது மற்றொரு சுவாரசியமான அம்சமாகும். இந்த மார்க்கெட் பகுதியில் கைவினைப்பொருட்கள் மற்றும் நகைகள் போன்றவற்றை பயணிகள் வாங்கலாம்.
சரஃபா பஜார், பஸாஸா பஜார், ஹோப் சர்க்கஸ், கேதல்குஞ்ச் பஜார் மற்றும் மலக்கேரா பஜார் ஆகியவை இங்குள்ள முக்கியமான கடைத்தெருக்களாகும். செவ்வாய்க்கிழமையை தவிர்த்து மற்ற வார நாட்களில் இந்த மார்க்கெட் பகுதி திறந்துள்ளது.



Click it and Unblock the Notifications